முக்கிய திட்டங்கள் என்னென்ன?
இந்த புதிய ஆர்டர்களில், மேற்கு இந்தியாவில் ஒரு தனியார் டெவலப்பரிடமிருந்து 500 kV High Voltage Direct Current (HVDC) மின் பாதைக்கான பணி முக்கியமானது. மேலும், கிழக்கு இந்தியாவில் ஒரு ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்திற்கு 132 kV கேபிளிங் பணிகள் மற்றும் அமெரிக்கா கண்டத்தில் டவர்கள், ஹார்டுவேர், போல்ஸ் சப்ளை செய்யவும் ஆர்டர்கள் வந்துள்ளன.
புதைபடிவ எரிபொருள் அல்லாத துறையில் வளர்ச்சி
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) பிரிவில், தென்னிந்தியாவில் 100+ மெகாவாட் (MW) காற்றாலை மின் திட்டத்திற்கான ஆர்டர் கிடைத்துள்ளது. இது ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளரிடமிருந்து வந்த தொடர் ஆர்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து மற்றும் கேபிள் பிரிவிலும் முன்னேற்றம்
போக்குவரத்து (Transportation) துறையில், தென்னிந்தியாவில் இரண்டு அதிநவீன ஆட்டோமேட்டிக் பிளாக் சிக்னலிங் (ABS) திட்டங்களுக்கான ஆர்டர்களையும் KEC International பெற்றுள்ளது. கேபிள்ஸ் மற்றும் கண்டக்டர்ஸ் பிரிவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் பல ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
நிர்வாகத்தின் கருத்து
KEC International-ன் MD மற்றும் CEO விமல் கேஜ்ரிவால் கூறுகையில், "இந்த மதிப்புமிக்க HVDC ஆர்டர், குறிப்பாக HVDC பிரிவில் எங்கள் இந்தியாவின் T&D ஆர்டர் புக்-ஐ மேலும் வலுப்படுத்துகிறது. எங்கள் ரெனியூவபிள்ஸ் வணிகம், தொடர் ஆர்டர்கள் மூலம் காற்றாலை மின்சாரப் பிரிவில் விரிவடைந்துள்ளது. அதேபோல், போக்குவரத்து வணிகம் ABS பிரிவில் அதன் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது" என்று தெரிவித்தார். KEC International தற்போது 110 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
