இந்தியாவின் அதிநவீன 5வது தலைமுறை போர் விமான திட்டமான AMCA-வில் Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனம் முக்கிய பங்கு வகிக்காது என்றும், அதற்கு பதிலாக டாடா, L&T, பாரத் ஃபோர்ஜ் போன்ற தனியார் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த வதந்திகள் HAL நிர்வாகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், இது குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் HAL நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த ஊகங்களுக்கு மத்தியில், HAL பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் (NSE) இன்று 5.7% சரிந்து ₹4,213.90 என்ற விலையில் முடிவடைந்தது. நடப்பு ஆண்டில் இதுவரை HAL பங்கு 4% வரை சரிந்துள்ளது, இது முதலீட்டாளர்களிடையே நிலவும் கவலையைப் பிரதிபலிக்கிறது.
எனினும், HAL நிர்வாகம் தனது வலுவான அடிப்படை வலிமையை (strong fundamentals) வலியுறுத்தியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகள் வரை, அதாவது 2032 வரை கணிசமான வருவாய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக (revenue visibility) அதன் ஆர்டர் புக் (order book) இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய மல்டி ரோல் ஹெலிகாப்டர் (IMRH), LCA Mk2, மற்றும் கேட்ஸ் (CATS) போன்ற உள்நாட்டு திட்டங்கள் 2032-க்குப் பிறகு உற்பத்தியில் தொடங்கும் என்றும், இவை நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்றும் HAL கூறியுள்ளது.
மேலும், HAL சிவில் ஏவியேஷன் துறையிலும் தனது கவனத்தை விரிவுபடுத்தி வருகிறது. துருவ் NG, ஹிந்துஸ்தான் 228, மற்றும் SJ-100 போன்ற விமான மாதிரிகள் மூலம் நிலையான வருவாய் ஆதாரங்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 'HAL வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ளது மற்றும் சீரான செயல்திறன் மூலம் தொடர்ச்சியான ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை வழங்க உறுதிபூண்டுள்ளது' என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
