சிறப்பாக செயல்பட்ட Q4 ரிசல்ட்ஸ்:
Bondada Engineering லிமிடெட், ஜனவரி-மார்ச் 2026 காலாண்டிற்கான (Q4 FY26) தங்களின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவர்களின் வருவாய் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 28% அதிகரித்து ₹916.20 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இது ₹717.68 கோடியாக இருந்தது. இந்த வலுவான வருவாய் வளர்ச்சியின் பலனாக, நெட் ப்ராஃபிட் 13% உயர்ந்து ₹62.88 கோடியாக பதிவாகியுள்ளது.
இது குறித்து பேசிய சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் Bondada Raghavendra Rao, "திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல், வலுவான ஆர்டர் புக்-ஐ லாபகரமாக மாற்றுதல், மற்றும் நிதி மேலாண்மையில் காட்டிய ஒழுக்கம் ஆகியவைதான் இந்த சிறப்பான வளர்ச்சிக்கு காரணம்" என தெரிவித்தார். "செயல்திறனில் சிறந்து விளங்குவது மற்றும் லாப வரம்பை (Margin Improvement) மேம்படுத்துவதில்தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இதுவே தொடர்ச்சியான காலாண்டு முடிவுகளுக்கு முக்கியமானது" என்றும் அவர் கூறினார். எதிர்காலத்தில், "இந்த வளர்ச்சி வேகத்தை தக்கவைத்துக் கொள்ளவும், நிதி ஒழுக்கத்தைப் பேணவும், பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை உருவாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்றும் அவர் உறுதி அளித்தார்.
நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய பங்கு:
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆற்றல் மாற்றத் துறையில் (Energy Transition) ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இவர்களின் நிதி வலிமை, தடையின்றி செயல்பட்டு லாபகரமாக இருப்பதற்கான திறனைக் காட்டுகிறது. சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தேசிய திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் இவர்களுடைய செயல்பாட்டு கட்டமைப்பு தயாராக உள்ளது.
