இமாலய லாபம், பிரம்மாண்ட வளர்ச்சி - Aegis Logistics நிதியறிக்கை
Aegis Logistics நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிலும் (Q3 FY'26), கடந்த 9 மாதங்களிலும் சிறப்பான நிதி செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 9 மாதங்களின் (டிசம்பர் 31, 2025 வரை) நிதி நிலை:
- வருவாய் 13% அதிகரித்து ₹5,739 கோடி எட்டியுள்ளது.
- EBITDA 26% வளர்ந்து ₹929 கோடியாக பதிவாகியுள்ளது.
- நெட் ப்ராஃபிட் (PAT) 39% உயர்ந்து ₹652 கோடியாக பதிவாகியுள்ளது (முந்தைய ஆண்டு ₹470 கோடி).
- consolidated வருவாய் ₹1,725 கோடி ஆக உள்ளது.
- Normalized EBITDA 29% உயர்ந்து ₹326 கோடி எட்டியுள்ளது.
- நெட் ப்ராஃபிட் (PAT) 45% என்ற மாபெரும் வளர்ச்சியைப் பதிவு செய்து ₹233 கோடியாக உயர்ந்துள்ளது (முந்தைய ஆண்டு ₹160 கோடி).
அடுத்த கட்ட விரிவாக்கம் - ₹10,000 கோடி முதலீடு!
Aegis Logistics தனது எதிர்கால வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில், மிகப்பெரிய விரிவாக்கத் திட்டங்களை அறிவித்துள்ளது. இதற்காக, 2027 நிதியாண்டிற்குள் (FY'27) USD 1.2 பில்லியன் (தோராயமாக ₹10,000 கோடி) தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. நீண்ட கால நோக்கில் 2030-க்குள் USD 5 பில்லியன் முதலீட்டை எட்டும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
இந்த பிரம்மாண்ட விரிவாக்கத்தில், மும்பை துறைமுகத்தில் Liquid சேமிப்புத் திறனை அதிகரிப்பது, JNPT-ல் Liquid திறனை விரிவாக்குவதுடன் LPG பாட்டிலிங் ஆலையை அமைப்பது, கண்ட்லா துறைமுகத்தில் VLGC கப்பல் பெர்த்தை (berth) செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது, மற்றும் புதிய Liquid, அம்மோனியா டெர்மினல்களை அமைப்பது போன்ற முக்கிய திட்டங்கள் அடங்கும்.
நிதி மேலாண்மை மற்றும் எதிர்காலக் கண்ணோட்டம்
இந்த பெரிய முதலீடுகளுக்கு, நிறுவனத்தின் உள்வருவாய் (Internal Accruals) மற்றும் சரியான கடன் மேலாண்மை (Debt Management) மூலம் நிதி திரட்டப்படும். கடன் விகிதத்தை (Debt Gearing Ratio) 0.6x என்ற அளவிலேயே வைத்திருக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. IPO மூலம் திரட்டப்பட்ட பணத்தை கடனை குறைக்க பயன்படுத்தியது, நிறுவனத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
மேலும், பிபாவாவ் (Pipavav) துறைமுகத்தில் பெட்ரோலியப் பொருட்கள் கையாளுவதற்கான 15 ஆண்டு கால take-or-pay ஒப்பந்தம், எதிர்கால வருவாயை உறுதி செய்துள்ளது. நிர்வாகம், விநியோகப் பிரிவில் (Distribution Segment) தற்போதைய வளர்ச்சி என்பது "பனிப்பாறையின் நுனி மட்டுமே" என்று குறிப்பிட்டுள்ளது. ஆக, விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் வலுவான ஒப்பந்தங்களால் Aegis Logistics-ன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
