இந்திய மருந்து தயாரிப்பு ஆலைகளில் US FDA திடீர் சோதனைகளை அதிகரித்துள்ளது. டேட்டா முறைகேடுகள் மற்றும் பராமரிப்பு குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இந்த ஒழுங்குமுறை சவால்கள் பார்மா நிறுவனங்களின் பங்குகளை பாதிக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் US Food and Drug Administration (FDA) அமைப்பு, 2026-ல் இந்திய மருந்து உற்பத்தி ஆலைகளின் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, முன் அறிவிப்பின்றி நடத்தப்படும் சோதனைகள் மூலம் தரக்கட்டுப்பாட்டில் உள்ள குளறுபடிகள் கண்டறியப்படுகின்றன. ஆவணங்களை அழித்தல், பின் தேதியிட்ட ஆவணங்கள் மற்றும் தரமற்ற தயாரிப்பு நெறிமுறைகள் போன்ற புகார்கள் இந்த ஆண்டு அதிகப்படியான 'Warning Letters' வழங்கப்பட காரணமாகியுள்ளன.
'கம்பையன்ஸ் ஸ்பைரல்' (Compliance Spiral)
வெக்டர் கன்சல்டிங் குரூப் ஆய்வின்படி, பல நிறுவனங்கள் தற்போது ஒருவித 'கம்பையன்ஸ் ஸ்பைரல்' சிக்கலில் சிக்கியுள்ளன. நிர்வாகத்தின் பெரும் பகுதி நேரம், தணிக்கை மற்றும் விசாரணை அறிக்கைகளை கையாளுவதிலேயே செலவிடப்படுகிறது. இது உற்பத்தித்திறனை குறைப்பதோடு, மருந்துகள் சந்தைக்கு செல்வதில் காலதாமதத்தை ஏற்படுத்தி, நிறுவனத்தின் வருவாயையும் நேரடியாக பாதிக்கிறது.
உள்நாட்டு அரசின் புதிய விதி
இந்திய அரசும் மருந்து விதிகள் (Drugs Rules) சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. தர சோதனையில் தோல்வியடையும் ஆலைகளின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்ற வரைவு விதி, நிறுவனங்களுக்கு இரட்டை நெருக்கடியை தந்துள்ளது. இது பெரிய முதலீடுகளைக் கோரும் என்பதால், லாப வரம்பு (Profit Margin) குறைய வாய்ப்புள்ளது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
பார்மா துறை இந்த ஆண்டு சுமார் 27% வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், இந்த ஏற்றம் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தாது. இனிவரும் காலாண்டு முடிவுகளில், அந்தந்த நிறுவனங்கள் ஆலைகளில் மேற்கொண்ட சரிசெய்தல் நடவடிக்கைகள் (Remediation efforts) மற்றும் 'Form 483' அப்சர்வேஷன்களை எவ்வளவு விரைவாகக் குறைக்கின்றன என்பதை கவனத்தில் கொள்வது அவசியம்.
