Metastatic pancreatic cancer சிகிச்சைக்கு முதல் முறையாக 'Rasonque' மருந்திற்கு US FDA அனுமதி வழங்கியுள்ளது. Revolution Medicines நிறுவனத்தின் இந்த மருந்து, கேன்சர் நோயாளிகளின் உயிர்வாழும் காலத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.
கேன்சர் சிகிச்சையில் மைல்கல்
புற்றுநோய் சிகிச்சையில் நீண்ட நாட்களாக 'அணுக முடியாததாக' கருதப்பட்ட KRAS மியூட்டேஷன்களை குறிவைத்து அழிக்கும் வகையில், Revolution Medicines நிறுவனத்தின் Rasonque (daraxonrasib) மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு 'First-in-class' RAS இன்ஹிபிட்டர் ஆகும். ஆகஸ்ட் 26, 2026 அன்று வெளியான இந்த FDA அனுமதி, ஆன்காலஜி துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சை முடிவுகள் எப்படி?
'RASolute 302' சோதனைகளின்படி, இந்த மருந்தின் செயல்பாடு வியக்கத்தக்க வகையில் உள்ளது. வழக்கமான கீமோதெரபி சிகிச்சையில் நோயாளிகளின் சராசரி வாழ்நாள் 6.7 மாதங்களாக இருந்த நிலையில், Rasonque சிகிச்சையின் மூலம் அது 13.2 மாதங்களாக அதிகரித்துள்ளது. இது நோயாளிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
விலையும் சவால்களும்
மருந்தின் செயல்திறன் சிறப்பாக இருந்தாலும், இதன் விலை பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒரு மாத சிகிச்சைக்கான செலவு தோராயமாக $39,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக விலை கொண்ட மருந்தை காப்பீட்டு நிறுவனங்கள் (Insurance) எவ்வளவு தூரம் ஆதரிக்கும்? நோயாளிகளின் பாக்கெட் செலவு எவ்வளவு இருக்கும்? என்பதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய கேள்வி.
மேலும், சிகிச்சையின் போது தோல் அரிப்பு, வாயில் புண்கள், குடல் மற்றும் நுரையீரல் தொடர்பான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மருத்துவர்கள் இதனை கவனமாக கையாள வேண்டும்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
பயோடெக் மற்றும் பார்மா துறையைப் பொறுத்தவரை, இந்த மருந்து ஒரு புதிய வழிமுறையை உறுதிப்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் இந்த மருந்தின் விற்பனை (Adoption Rate) எப்படி இருக்கப்போகிறது, நிறுவனம் காப்பீட்டு நிறுவனங்களுடன் எப்படி டீல் செய்கிறது என்பதை பொறுத்தே இதன் நீண்டகால வர்த்தக வெற்றி அமையும்.
