நிதி நிலைமை எப்படி இருக்கிறது?
Strides Pharma Science நிறுவனம், Q3 FY'26-ல் ₹236 கோடி என்ற மிக உயர்ந்த காலாண்டு EBITDA-வை பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12% அதிகம். EBITDA மார்ஜினும் 19.8% ஆக உயர்ந்துள்ளது.
ஆப்ரேஷனல் ப்ராஃபிட் ஆப்டர் டாக்ஸ் (PAT) 39% வளர்ந்து ₹128 கோடியை எட்டியுள்ளது. குறிப்பாக, இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களிலேயே, FY'25 முழு ஆண்டின் ஆப்ரேஷனல் PAT-யை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிராஸ் மார்ஜின் 59.8% ஆக வலுவாக உள்ளது. இதை 58% முதல் 60% வரம்பிற்குள் தக்கவைத்துக் கொள்ள முடியும் என நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் கடன் அளவு குறைந்து, Debt/EBITDA 1.59x என்ற நிர்வகிக்கக்கூடிய அளவில் உள்ளது. Return on Capital Employed (ROCE) 15.8% ஆக மேம்பட்டுள்ளது. நெட் டெப்ட் (Net Debt) ₹1,436 கோடி ஆகும். கடந்த 9 மாதங்களில், ₹169 கோடி கடன் குறைக்கப்பட்டு, நிலையான நாணய மதிப்பில் (constant currency) கடனில் குறைப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய ப்ராடக்ட் உரிமைகளுக்காக (Product Rights) ₹284 கோடி மூலதன செலவு (Capital Expenditure) செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க சந்தையில் சவால்கள்!
இந்த நிதிநிலைமை நேர்மறையாக இருந்தாலும், அமெரிக்க சந்தையின் (US Business) நிலைமை சற்று கலவையாகவே உள்ளது. வருவாய் $70 மில்லியன் என்ற அளவில் தேக்கமடைந்துள்ளது. இதற்கு, ஃப்ளூ சீசன் தாமதமானதால் ஏற்பட்ட விற்பனை பாதிப்பு, சந்தையில் போட்டி அதிகரித்தது, கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பொருட்களுக்கான (Control Substances) ஒதுக்கீடு குறைந்தது, மற்றும் லாபம் தராத 8 ப்ராடக்ட்களை நிறுத்தியது போன்ற தற்காலிக காரணங்களை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், 2028-ஆம் ஆண்டிற்குள் (FY'28) அமெரிக்க சந்தையில் $400 மில்லியன் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிர்வாகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்காக, முடங்கிக் கிடந்த ப்ராடக்ட்களை மீண்டும் சந்தைக்கு கொண்டு வருவது, கண்ட்ரோல் சப்ஸ்டன்சஸ் மற்றும் நாசல் ஸ்ப்ரே போன்ற சிக்கலான பிரிவுகளில் முதலீடு செய்வது போன்றவை திட்டமிடப்பட்டுள்ளன. அமெரிக்க சந்தைக்கான புதிய CEO ஆக பீட்டர் ஹார்ட்விக் (Peter Hardwick) நியமிக்கப்பட்டுள்ளார்.
US அல்லாத சந்தைகளில் அசத்தல் வளர்ச்சி!
US அல்லாத சந்தைகளில் (Ex-US Markets) 20% வருவாய் வளர்ச்சி பெற்றுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 47% பங்களிக்கிறது. குறிப்பாக, OTHER REGULATED MARKETS (ORM) பிரிவில் 21% மற்றும் Growth Markets பிரிவில் 19% என சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது நிறுவனத்தின் புவியியல் ரீதியான பல்வகைப்படுத்தலைக் காட்டுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், US சந்தையின் வருவாய் பங்களிப்பிற்கு இணையாக Ex-US சந்தைகளில் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இது பெரிய வளர்ச்சி வாய்ப்பு என்றாலும், அதை செயல்படுத்துவது முக்கியம். வரும் காலாண்டுகளில், US சந்தையில் புதிய ப்ராடக்ட்கள் அறிமுகமாகும் வேகம் மற்றும் அனைத்து முக்கிய சந்தைகளிலும் நிலவும் போட்டி நிலவரத்தை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.