Jeena Sikho Lifecare Limited தனது Q3 FY26 நிதியாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த முறை நிறுவனம் அபாரமான வளர்ச்சி கண்டுள்ளது.
நிறுவனத்தின் வருவாய் (Revenue) மட்டும் 92% உயர்ந்து, கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்த ₹115.69 கோடியிலிருந்து இந்த முறை ₹221.66 கோடியாக பதிவாகியுள்ளது. முந்தைய காலாண்டுடன் (Q2 FY26) ஒப்பிடும்போதும் 17% வளர்ச்சி கண்டுள்ளது.
EBITDA 240% என்ற மிகப்பெரிய வளர்ச்சியுடன் ₹100.80 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் (PAT) 405% என்ற மாபெரும் ஜம்புடன் ₹66.73 கோடியை எட்டியுள்ளது. ஒரு பங்குக்கான லாபம் (EPS) 407% உயர்ந்து ₹5.37 ஆக உள்ளது.
குறிப்பாக, நிறுவனத்தின் லாப வரம்புகள் (Margins) சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது கணிசமாக மேம்பட்டுள்ளன. EBITDA margin 26% இலிருந்து 45% ஆகவும், PAT margin 11% இலிருந்து 30% ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த லாப வரம்பு (Gross Profit Margin) 89% ஆக வலுவாக உள்ளது.
நிறுவனம் கடன் இல்லாத (Debt-free) நிலையைத் தொடர்ந்து பராமரித்து வருகிறது. Debt-to-Equity ratio பூஜ்ஜியத்திற்கு மிக அருகில் உள்ளது. மூன்று ஆண்டுகால சராசரி ROCE 71% ஆக பதிவாகியுள்ளது. மற்ற வருமானங்கள் (Other Income) 558% அதிகரித்துள்ளன, அதே சமயம் நிதிச் செலவுகள் (Finance Costs) 18% குறைந்துள்ளன.
எதிர்காலத்திற்கான அதன் திட்டங்களையும் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 475 படுக்கைகளுக்கு மேல் புதிய மருத்துவ வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வலுசேர்க்கும்.
'Jeena Sikho Health Card' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. மூலதனம் குறைவாகவும், கடன் இன்றியும் செயல்படும் தங்களின் தனித்துவமான வணிக மாதிரியில் (Business Model) கவனம் செலுத்தி, சர்வதேச சந்தைகளிலும் (International Diversification) விரிவடைய நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.