GDN Ventures-ன் முதலீடு
ராஜஸ்தான் மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட GDN Ventures என்ற நிறுவனம், Gaudium IVF மற்றும் பெண்கள் ஆரோக்கியம் (Women Health) நிறுவனத்தில் 10 லட்சம் பங்குகளை, அதாவது 1.37% பங்குகளை ₹8.58 கோடி விலைக்கு வாங்கியுள்ளது. பங்குகள் ஒரு ஒன்று ₹85.84 என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளது.
பங்கு விலை கணிசமான உயர்வு
இந்த Bulk Deal அறிவிப்பிற்கு பிறகு, Gaudium IVF நிறுவனத்தின் பங்கு விலை 12.56% ஆக உயர்ந்து ₹89.17 என்ற விலையில் வர்த்தகமானது. இந்த நிறுவனம் பிப்ரவரி 27 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போதிலிருந்து, அதன் ஆரம்ப விலையான ₹79-ல் இருந்து இதுவரை சுமார் 13% லாபம் ஈட்டியுள்ளது.
ஏப்ரல் 9 அன்று நடந்த பிற பெரிய பரிவர்த்தனைகள்
அதே நாளில், Arihant Capital Markets நிறுவனம் Sai Parenterals என்ற மருந்து நிறுவனத்தில் 0.9% பங்குகளை ₹16.84 கோடிக்கு வாங்கியுள்ளது. Trendview Capital Fund நிறுவனம் Striders Impex மற்றும் Marushika Technology நிறுவனங்களின் பங்குகளை விற்றுள்ளது. மேலும், Minerva Ventures Fund நிறுவனம் Expo Engineering and Projects பங்குகளை வாங்கியுள்ளது.