Aurobindo Pharma நிறுவனத்தின் Q4 FY26 நிதிநிலை முடிவுகள் வெளியான நிலையில், பங்குச் சந்தையில் இன்று அதன் பங்குகள் சுமார் 7% வரை சரிந்து முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாபம் உயர்ந்தும் முதலீட்டாளர்கள் கவலை
நிறுவனம் தனது ஜனவரி-மார்ச் காலாண்டிற்கான consolidated profit after tax-ஐ 2% அதிகரித்து ₹920.84 கோடி என அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ₹8,382.12 கோடியாக இருந்தது. ஆனால், இந்த காலாண்டில் மொத்த வருவாய் ₹8,853.34 கோடியாக உயர்ந்திருந்தாலும், செலவுகளும் ₹7,677.34 கோடியாக அதிகரித்துள்ளன. முக்கியமாக, Ebitda (வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகைக்கு முந்தைய வருவாய்) 0.5% உயர்ந்து ₹1,801 கோடியாக இருந்தாலும், Ebitda மார்ஜின் 21.4% என்பதிலிருந்து 20.3% ஆக குறைந்துள்ளது. இந்த மார்ஜின் வீழ்ச்சியே பங்கு விலை சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் வியாபாரம் மந்தம்
Aurobindo Pharma நிறுவனத்தின் முக்கிய சந்தையான அமெரிக்காவில், இந்த காலாண்டில் அதன் formulation business சற்று மந்தமாக செயல்பட்டுள்ளது. இந்த பிரிவின் வருவாய் கடந்த ஆண்டை விட 13% குறைந்து ₹3,543 கோடியாக பதிவாகியுள்ளது. அமெரிக்கா சந்தை பொதுவாக Aurobindo Pharma-வின் மொத்த வருவாயில் சுமார் 40% பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் வளர்ச்சி
அமெரிக்க சந்தையின் சரிவுக்கு மாறாக, ஐரோப்பிய formulation business-ல் நிறுவனம் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இப்பகுதியில் வருவாய் 30.2% உயர்ந்து ₹2,795 கோடியாக உள்ளது. Aurobindo Pharma உலகளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
