லாபத்திற்கு என்ன காரணம்?
Ajanta Pharma, FY26 நான்காம் காலாண்டில் எதிர்பார்ப்புகளை மிஞ்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது. கம்பெனியின் நிகர லாபம் (Net Profit) கடந்த ஆண்டை விட 18.4% உயர்ந்து ₹266.7 கோடியாக பதிவாகியுள்ளது. இதில் முக்கிய பங்கு வகிப்பது அமெரிக்க சந்தையில் ஜெனரிக் மருந்துகளின் விற்பனை. இந்த சந்தையில் வருவாய் மட்டும் 56% உயர்ந்து ₹505 கோடியாக உள்ளது.
மொத்த வருவாய் (Revenue) 21.5% அதிகரித்து ₹1,421.64 கோடியை எட்டியுள்ளது. கம்பெனியின் EBITDA மார்ஜின் 26.4% ஆக உள்ளது. மே 2026 தொடக்கத்தில், பங்கு விலை சுமார் ₹2,800 முதல் ₹2,900 வரை வர்த்தகமானது. கடந்த ஒரு வருடத்தில் 5.13% வருவாய் ஈட்டியுள்ளது.
Biocon உடன் புதிய டீல்
அமெரிக்க சந்தை வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும், இந்திய மருந்து துறையில் நிலவும் சவால்களையும் Ajanta Pharma எதிர்கொள்கிறது. இந்த நிலையில், Ajanta Pharma, Biocon நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் (Strategic Deal) இறங்கியுள்ளது. இதன் மூலம், நீரிழிவு மற்றும் உடல் எடை குறைப்புக்கான 'Semaglutide' மருந்தை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் 26 நாடுகளில் சந்தைப்படுத்த உள்ளது. இந்த மருந்து 2026ன் பிற்பகுதியிலோ அல்லது 2027ன் தொடக்கத்திலோ சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வருடாந்திர விற்பனை $25-30 மில்லியன் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் மதிப்பு மற்றும் நிதி நிலை
Ajanta Pharma-வின் பங்கு விலை, Cipla (சுமார் 23x) மற்றும் Dr. Reddy's (சுமார் 19.4x) போன்ற போட்டியாளர்களை விட அதிகமாக உள்ளது. இதன் P/E ரேஷியோ சுமார் 35-40x ஆக உள்ளது. Sun Pharmaceutical Industries (சுமார் 35.6x) உடன் ஒப்பிடத்தக்கதாக உள்ளது.
கம்பெனியின் கடன் (Debt) மிகக் குறைவு (0.01 debt-to-equity ratio). ஆண்டுக்கு ₹8-10 பில்லியன் வரை நல்ல Free Cash Flow-ஐ உருவாக்குகிறது. இது எதிர்கால முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்கும்.
எதிர்கொள்ளும் சவால்கள்
Ajanta Pharma-வின் Paithan தொழிற்சாலையில் ஏப்ரல் 2026ல் USFDA ஆய்வு நடத்தியதில் 5 முக்கியக் குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து கம்பெனி பதிலளித்து வருகிறது. அமெரிக்க சந்தையில் மருந்துகளின் விலை குறைப்பு (Price Erosion) என்பதும் ஒரு முக்கிய சவாலாகும்.
நிபுணர்களின் கணிப்பு
Prabhudas Lilladher நிறுவனம், Ajanta Pharma-க்கு 'BUY' ரேட்டிங் கொடுத்துள்ளது. இதன் டார்கெட் விலையை ₹3,400 ஆக உயர்த்தியுள்ளது. FY26 முதல் FY28E வரை, EBITDA/PAT 17% CAGR வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறது. சந்தை நிபுணர்களில் 12 பேரில் 10 பேர் 'BUY' என பரிந்துரைத்துள்ளனர். சராசரி 12 மாத டார்கெட் விலை ₹3,203 ஆக உள்ளது.
