லாபத்தில் சரிவுக்கான காரணங்கள்
இந்த சரிவிற்கு முக்கிய காரணங்களாக, புதிதாக கட்டப்பட்ட அடாலி (Atali) பிளாண்டில் உற்பத்தியை சீரமைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் ஆக்டிவ் பார்மாசூட்டிக்கல் இன்கிரிடியண்ட் (API) மற்றும் இண்டர்மீடியேட்ஸ் வணிகத்தில் நிலவும் மந்த நிலை ஆகியவை கூறப்படுகிறது. இதனால், margin-களில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த காலாண்டில் EBITDA 10.43% குறைந்து ₹103 கோடியாக பதிவாகியுள்ளது.
மேலும், கணக்கியல் விதிமுறைகள் (Incoterms) காரணமாக, டிசம்பர் 31, 2025 நிலவரப்படி ₹49 கோடி மதிப்பிலான பொருட்கள் போக்குவரத்தில் இருந்தன. இதனால், இந்த காலாண்டில் அந்த வருவாயை பதிவு செய்ய முடியவில்லை. இது அடுத்த காலாண்டில் (Q4) சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ₹5 கோடி நிகர அந்நிய செலாவணி இழப்பும் (forex loss) லாபத்தை பாதித்துள்ளது.
வளர்ச்சி இலக்குகள் குறைப்பு
இந்த பிரச்சனைகளால், FY26 நிதியாண்டுக்கான EBITDA வழிகாட்டுதலை (guidance) நிறுவனம் திருத்தியுள்ளது. இப்போது, கடந்த ஆண்டைப் போலவே அல்லது மிகச் சிறிய வளர்ச்சியுடன் (marginal growth) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. CDMO வணிகத்தில் இலக்குகளை எட்டுவது சாத்தியம் என்றாலும், சில ப்ராஜெக்ட் டெலிவரிகளில் ஏற்பட்ட தாமதங்களால், அதிக இலக்குகளை எட்டுவது கடினமாக இருக்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எதிர்கால திட்டங்கள்
2026ல் ஆன்காலஜி API-களை (Oncology APIs) புதிதாக அறிமுகப்படுத்தவும், அந்த துறையில் உள்ள ப்ராஜெக்ட்களை முன்கூட்டியே கைப்பற்றுவதற்கான உத்திகளை மறுபரிசீலனை செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜாந்தின் (Xanthine) பிரிவில் விரிவாக்கப் பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. மார்ச் 2026 இறுதிக்குள் உற்பத்தித் திறன் தயாராகி, FY27 முதல் காலாண்டில் (Q1 FY27) உபயோகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் சலுகைகள் நிறுத்தப்பட்டதால், இந்த பிரிவில் விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் மற்றும் முதலீடுகள்
ஒன்பது மாத முடிவில், கம்பெனியின் மொத்தக் கடன் (gross debt) ₹650 கோடியாக உள்ளது. நான்காவது காலாண்டிற்குள், நிகர கடன்-பங்கு விகிதத்தை (net debt-to-equity ratio) சுமார் 0.3 முதல் 0.35 ஆகக் கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது.
அடாலி பிளாண்டிற்கான மொத்த செலவு ₹450 கோடி. இதில் ₹300 கோடி ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது, மீதம் ₹150 கோடி உள்ளது. ஜாந்தின் விரிவாக்கத்திற்கு சுமார் ₹150 கோடி கேபெக்ஸ் (Capex) செய்யப்பட்டுள்ளது. FY27ல் புதிய பிளாண்ட் யூனிட்டிற்கான கேபெக்ஸ், CDMO வணிகத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பொறுத்து இருக்கும்.
டிவிடெண்ட் அறிவிப்பு
இவற்றைத் தொடர்ந்து, பங்குதாரர்களுக்கு ஒரு ஷேருக்கு ₹1.5 இடைக்கால டிவிடெண்டாக (interim dividend) அறிவிக்கப்பட்டுள்ளது.