ரஷ்யா மீதான வரவிருக்கும் தடைகள் காரணமாக, இந்தியா மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதியை கணிசமாக அதிகரித்து வருகிறது. சவுதி அரேபியா, குவைத், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வர ஒரு டஜன் டேங்கர்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இது எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களின் (tanker) கட்டணத்தை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு உச்சத்திற்கு உயர்த்தியுள்ளது.