ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களான Lukoil மற்றும் Rosneft மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தடைகளுக்கு இந்திய மற்றும் சீன வங்கிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் இணங்கத் தொடங்குவதாக அமெரிக்க கருவூலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தடைகள் மாஸ்கோவின் போர் நிதியைக் குறைப்பதற்காக விதிக்கப்பட்டுள்ளன. சீனா மற்றும் இந்தியாவின் நிறுவனங்கள் "ஆபத்துக்களைத் தவிர்க்க விரும்புபவை" (risk averse) என்றும், அவை மேற்கத்திய நாடுகளுடனான தங்கள் உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதால் தடைகளுக்கு இணங்குகின்றன என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.