ஈரான் நாட்டுடன் எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் வர்த்தகம் செய்ததாக, 4 இந்திய நிறுவனங்கள் மற்றும் 3 நபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 'Operation Economic Outcast' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை இந்திய தொழில்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நிதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பில், ஈரானின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பரிவர்த்தனைகளுக்கு உதவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த பட்டியலில் Portease Partners LLP, Sadashiva Overseas Ltd, PP Softtech Pvt Ltd, மற்றும் Prakrutees Infra Impex Pvt Ltd ஆகிய இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு சுமார் $119 மில்லியன் என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Indrismiya Ashrafmiya Shekh, Harish Ramchandra Rangi, மற்றும் Prashant Garg ஆகிய மூன்று நபர்களும் இந்த தடையில் சிக்கியுள்ளனர். இது ஈரான் சர்வதேச நிதி வலைப்பின்னல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
சந்தையில் என்ன தாக்கம்?
தற்போது பார்சியன் வளைகுடாவில் நிலவும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து மூடப்பட்டிருப்பது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியில் பெரும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இது இரண்டு முக்கிய எச்சரிக்கைகளை விடுக்கிறது:
ஒழுங்குமுறை இணக்கம் (Compliance Risk): அமெரிக்கா விதித்துள்ள இந்த 'Secondary Sanctions' காரணமாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஷிப்பிங் நிறுவனங்கள் தங்கள் 'Due Diligence' செயல்முறைகளை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேக்ரோ எக்கனாமிக் தாக்கம்: ஹார்முஸ் நீரிணை விவகாரம் நீடித்தால், கச்சா எண்ணெய் விலை volatility ஆக இருக்க வாய்ப்புள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி செலவை அதிகரித்து, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களின் லாப வரம்பை (Operating Margins) பாதிக்கக்கூடும்.
இந்திய நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குறித்த கூடுதல் விளக்கங்களையும், ஹார்முஸ் நீரிணையின் செயல்பாடுகளையும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.
