முதலீடுகளால் ரெனியூவல் எனர்ஜி வளர்ச்சி
India தனது ரெனியூவல் எனர்ஜி உற்பத்தியை கணிசமாக உயர்த்தியுள்ளது. 2025 நிதியாண்டில் (FY25) இந்தியாவின் மின் உற்பத்தியில் ரெனியூவல் எனர்ஜியின் பங்கு 20.2% ஆக உயர்ந்துள்ளது. இது 2016 நிதியாண்டில் (FY16) 14.2% ஆக இருந்தது. இந்த வளர்ச்சிக்கு துறையில் 6 மடங்கு அதிகரித்துள்ள கடன் உதவியும் (Credit Growth) ஒரு முக்கிய காரணம். 2021ல் ₹1,688 கோடியாக இருந்த கடன், 2025 நிதியாண்டில் ₹10,325 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ரெனியூவல் எனர்ஜி திறனில் India தற்போது உலகளவில் 4வது இடத்தில் உள்ளது.
தேவையை மிஞ்சும் உற்பத்தி: இறக்குமதி அதிகரிப்பு
அதே சமயம், ஒரு நபருக்கான மின்சார நுகர்வு 18.3% அதிகரித்து, 2025 நிதியாண்டில் (FY25) ஒருவருக்கு 18,096 மெகாஜூல்களாக உயர்ந்துள்ளது. பெருகிவரும் தொழில்மயமாக்கல் மற்றும் மக்களின் வருமானம் உயர்வு காரணமாக இந்த மின்சார தேவை அதிகரிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி திறனை விட தேவை அதிகமாக இருப்பதால், இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் Indiaவுக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த 2030 நிதியாண்டு வரை Indiaவின் மின்சார தேவை ஆண்டுக்கு 6.4% என்ற வேகத்தில் வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மற்ற முக்கிய நாடுகளை விட மிக அதிகம்.
பச்சை ஆற்றல் இருந்தாலும், இறக்குமதி அதிகரிப்பு
ரெனியூவல் எனர்ஜி உற்பத்தி அதிகரித்தாலும், Indiaவின் ஒட்டுமொத்த எரிசக்தி இறக்குமதி சார்புநிலை 2016 நிதியாண்டில் (FY16) 37.8% ஆக இருந்தது, தற்போது 2025 நிதியாண்டில் (FY25) 40.6% ஆக உயர்ந்துள்ளது. இதில், கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலை 84.6% லிருந்து 89.4% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இயற்கை எரிவாயு (Natural Gas) இறக்குமதியும் 39.9% லிருந்து 49.7% ஆக அதிகரித்துள்ளது. நிலக்கரி (Coal) இறக்குமதி சார்புநிலை மட்டும் 27.3% லிருந்து 23.5% ஆக குறைந்துள்ளது. இருப்பினும், நிலக்கரியே இன்னும் முக்கிய எரிசக்தியாக உள்ளது.
பொருளாதார மற்றும் பாதுகாப்பு அபாயங்கள்
இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை அதிகமாக சார்ந்திருப்பது, Indiaவை உலகளாவிய விலை ஏற்ற இறக்கம் மற்றும் புவிசார் அரசியல் அபாயங்களுக்கு உள்ளாக்குகிறது. Crisil Ratings ஆய்வு முடிவுகளின்படி, Indiaவின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு மிகவும் உணர்திறன் கொண்டது. ஏனெனில், India தனது கச்சா எண்ணெய் தேவையில் 85% க்கும் அதிகமாக இறக்குமதியை சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை $10 உயர்ந்தால், Indiaவின் ஆண்டு இறக்குமதி செலவு $15-20 பில்லியன் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறை (Current Account Deficit) மற்றும் பணவீக்கம் (Inflation) பாதிக்கப்படும். முக்கிய கப்பல் வழித்தடங்களில் ஏற்படும் தடங்கல்கள் விலையை மேலும் அதிகரிக்கக்கூடும். மேலும், சீரற்ற மின்சார உற்பத்தி, சேமிப்பு வசதிகள் குறைபாடு போன்ற காரணங்களால் ரெனியூவல் எனர்ஜியின் முழு திறனும் பயன்படுத்தப்படுவதில்லை.
எதிர்காலப் பார்வை மற்றும் சவால்கள்
Indiaவின் எரிசக்தி கொள்கை, ரெனியூவல் எனர்ஜி வளர்ச்சியை சமநிலைப்படுத்துவதோடு, எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 500 GW பசுமை எரிசக்தி (Non-fossil fuel capacity) திறனை எட்டுவதை India அரசு இலக்காக கொண்டுள்ளது. எனினும், அதிகரித்து வரும் தேவையை சமாளிக்க யதார்த்தமான அணுகுமுறை தேவை. வேகமான ரெனியூவல் எனர்ஜி பயன்பாட்டுடன், நம்பகமான மின்சார தேவைகளையும் பூர்த்தி செய்ய, நவீன மின் கட்டமைப்பு (Grid Modernization) மற்றும் சேமிப்பு தொழில்நுட்பங்களில் (Storage) முதலீடு செய்ய வேண்டியது அவசியம். உலகளாவிய புவிசார் அரசியல் ஸ்திரமின்மை, இறக்குமதி ஆதாரங்களை பன்முகப்படுத்துவதையும், உள்நாட்டு பசுமை எரிசக்தியை துரிதப்படுத்துவதையும் ஊக்குவிக்கும். ரெனியூவல் எனர்ஜியின் பங்கு அதிகரிக்கும் என்றாலும், தேவை அதிகரிப்பால் ஏற்படும் இறக்குமதி சார்புநிலை ஒரு முக்கிய காரணியாகவே தொடரும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.