2025-ல் அறிவிக்கப்பட்ட இரண்டு offshore wind டெண்டர்கள் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாததால் ரத்து செய்யப்பட்டன. இதை சரிசெய்ய, பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நிபுணர்களுடன் இணைந்து இந்தியா புதிய வியூகத்தை வகுத்து வருகிறது.
ஆஃப்ஷோர் விண்ட் (Offshore wind) மின்சாரத் துறையில் இந்திய அரசு பெரிய மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் குஜராத் கடற்கரை பகுதிகளில் அறிவிக்கப்பட்ட 4 GW மற்றும் 500 MW திறன் கொண்ட இரண்டு முக்கிய டெண்டர்கள், போதிய முதலீட்டாளர்கள் முன்வராத காரணத்தால் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, எரிசக்தி அமைச்சகம் பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து, புதிய ஏல முறைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஏன் இந்தத் தேக்கம்?
ஆன்ஷோர் (Onshore) காற்றாலை மின்சாரத்தை விட, ஆஃப்ஷோர் திட்டங்களுக்கு 4 மடங்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. இதோடு போதிய துறைமுக கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மற்றும் நீண்டகால நிதி ஆதரவு பற்றிய தெளிவின்மை ஆகியவை தனியார் நிறுவனங்களை தயக்கம் காட்ட வைத்துள்ளன.
அரசின் அடுத்த கட்டம்
எதிர்கால ஏலதாரர்களுக்குத் துல்லியமான தரவுகளை வழங்க, தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி மற்றும் கடல் தரைத்தள ஆய்வுகளை அரசு ஏற்கனவே முடித்துள்ளது. 2030-க்குள் மொத்த விண்ட் எனர்ஜி திறனை 107 GW ஆக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது (தற்போதைய திறன் 58 GW). இந்த இலக்கை அடைய சர்வதேச நாடுகளின் தொழில்நுட்ப உதவி மற்றும் வலுவான சப்ளை செயின் மிக அவசியமாகக் கருதப்படுகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
அடுத்தகட்ட ஏலங்களில் அரசு வழங்கும் புதிய நிதிச் சலுகைகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவு குறித்த அறிவிப்புகள் மிகவும் முக்கியம். மின்சார கட்டண நிலைத்தன்மை மற்றும் துறைமுக வசதிகள் மேம்படுத்தப்படும் வரை, இந்தத் துறை குறித்த முதலீட்டு முடிவுகளில் கவனமாக இருப்பது நல்லது.
