Green Hydrogen தயாரிப்பை மேம்படுத்தும் வகையில், IIT Madras ஆராய்ச்சியாளர்கள் புதிய reconfigurable power conversion சிஸ்டத்தை உருவாக்கியுள்ளனர். இது எலக்ட்ரோலிசிஸ் (Electrolysis) முறையில் ஏற்படும் தடங்கல்களை குறைத்து, செயல்திறனை அதிகரிக்கும்.
தொழில்நுட்பத்தின் சிறப்பு என்ன?
பொதுவாக ஹைட்ரஜன் தயாரிப்பில் வோல்டேஜ் நிலையற்ற தன்மை மற்றும் எனர்ஜி இழப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதனை முறியடிக்க, Dr. Deepak Ronanki தலைமையிலான குழு, குறிப்பிட்ட கன்வெர்ட்டர் சேனல்களை தேவைக்கேற்ப ஆன்/ஆஃப் செய்யும் பிரத்யேகமான 'Predictive Control' முறையை வடிவமைத்துள்ளது. 5 kVA திறன் கொண்ட இந்த லேப் ப்ரோட்டோடைப், சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டாலும் தொடர்ந்து இயங்கும் வகையில் (Fault-tolerance) உருவாக்கப்பட்டுள்ளது.
சவால்களும் எதார்த்தமும்
தற்போது இது லேப் அளவில் மட்டுமே இருப்பதால், மெகாவாட் அளவில் பெரிய தொழிற்சாலைகளுக்கு இதைக் கொண்டு செல்வது மிகப்பெரிய பொறியியல் சவால். குறிப்பாக, அதிகப்படியான வெப்பத்தை கையாள்வது மற்றும் கிரிட் தரம் குறையாமல் மின்சாரத்தை பகிர்ந்தளிப்பது மிக முக்கியமானது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
Green Hydrogen துறையில் Hyundai Motor India மற்றும் IIT Madras போன்ற அமைப்புகள் இணைந்து பல முன்னெடுப்புகளை எடுத்தாலும், இந்த துறை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. தற்போது 'Grey' ஹைட்ரஜனை விட 'Green' ஹைட்ரஜன் தயாரிப்பு செலவு மிக அதிகம். மேலும், பிளாட்டினம் மற்றும் இரிடியம் போன்ற இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை, இந்தத் துறையின் லாபத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும், அது வணிக ரீதியாக லாபகரமாக மாற நீண்ட கால முதலீடும், உள்கட்டமைப்பு வளர்ச்சியும் அவசியம்.
