Q1 முடிவுகளில், கம்பெனியின் மொத்த வருவாய் (Total Revenue) 11.4% உயர்ந்து $115.49 பில்லியன் எட்டியுள்ளது. இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு முக்கிய காரணம், சவுதி அரேபியாவின் ஈஸ்ட்-வெஸ்ட் கிரூட் பைப்லைன் அதன் முழுமையான 7 மில்லியன் பேரல் தினசரி திறனை எட்டியதுதான்.
இந்த பைப்லைன், உலகின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லாமல், எண்ணெயை ஏற்றுமதி செய்ய ஒரு மாற்று வழியை வழங்குகிறது. இதனால், ஏற்றுமதியில் ஏற்படும் தடங்கல்களுக்கு மத்தியில் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
Saudi Aramco தலைவர் மற்றும் CEO அமின் எச் நாசர் கூறுகையில், 'இந்த ஈஸ்ட்-வெஸ்ட் பைப்லைன் ஒரு முக்கியமான விநியோக நாடியாகும். இது ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் தடங்கல்களைக் குறைக்க உதவுகிறது. உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கியப் பங்கை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்' என்றார்.
மேலும், வெளிப்புறச் சவால்களுக்கு மத்தியிலும், உள்நாட்டு உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய வலையமைப்பைப் பயன்படுத்தி, தடைகளை சமாளித்து, தனது நீண்டகால இலக்குகளில் கவனம் செலுத்துவதாகவும் நாசர் தெரிவித்தார்.
