24 கோடி மக்கள் தொகை கொண்ட உத்திரப் பிரதேசம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, ஆளுகை மற்றும் கொள்கை சூழல் ஆகிய நான்கு முக்கிய தூண்களால் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. தொழிற்சாலைப் பதிவுகள் 2015 இல் ஆண்டுக்கு 500 ஆக இருந்த நிலையில், 2023-24 இல் 3,100 ஆக உயர்ந்துள்ளன, இந்த ஆண்டு 6,000 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளனர். மாநிலத்தின் ஜிடிபி மற்றும் தனிநபர் வருமானம் ஏழு ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. வலுவான எம்எஸ்எம்இ (MSME) அடித்தளத்துடன், சேவைத் துறையை மேம்படுத்த புதிய ஜிசிசி (GCC) கொள்கையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.