நுகர்வோர் நம்பிக்கை சரிகிறது!
University of Michigan நடத்திய ஆய்வின்படி, அமெரிக்க நுகர்வோரின் மனநிலை (Consumer Sentiment) 48.2 ஆக பதிவாகியுள்ளது. இது இதுவரை இல்லாத மிகக் குறைந்த அளவாகும். கடந்த ஆண்டை விட இது 7.7% சரிவு, மேலும் ஏப்ரல் மாதத்தில் 49.8 ஆக இருந்தது.
இந்த சரிவுக்கு முக்கிய காரணம் பணவீக்கம் (Inflation). மூன்றில் ஒரு பங்கு நுகர்வோர் பெட்ரோல் விலை உயர்வை முக்கிய பிரச்சனையாகக் குறிப்பிட்டுள்ளனர். மற்றொரு மூன்றில் ஒரு பங்கு பேர், வரிகள் (Tariffs) அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மார்க்கெட்டில் AI அலை!
மறுபுறம், பங்குச்சந்தையில் நிலைமை தலைகீழாக உள்ளது. குறிப்பாக டெக்னாலஜி சார்ந்த Nasdaq Composite இன்டெக்ஸ், ஏப்ரல் 1 முதல் 22% உயர்ந்து, வரலாற்றில் இல்லாத உச்சமான 23,235 புள்ளிகளை எட்டியுள்ளது.
கிரிப்டோ சந்தையில் Bitcoin-ம் அசத்தி வருகிறது. கடந்த மாதம் 11.8% உயர்ந்துள்ள இது, தற்போது $80,700 ஆக உள்ளது. S&P 500 இன்டெக்ஸ் 12% உயர்ந்து 7,398 புள்ளிகளை தொட்டது. இந்த ஏற்றத்திற்கு முக்கிய காரணம், AI மற்றும் முன்னணி டெக்னாலஜி நிறுவனங்களின் வலுவான நிதிநிலை அறிக்கைகள் (Results) மற்றும் அதீத முதலீடுகள்.
ஏன் இந்த வேறுபாடு?
Bitget Wallet-ன் COO Alvin Kan கூறுகையில், "சந்தைகள் எதிர்கால வளர்ச்சியை நம்பி முதலீடு செய்கின்றன. ஆனால், நுகர்வோர் தற்போதைய பணப் பிரச்சனை மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு பற்றி கவலைப்படுகிறார்கள். நிறுவன முதலீடுகள் AI, செமிகண்டக்டர் மற்றும் டிஜிட்டல் சொத்துக்களில் குவிந்து வருகின்றன. இதுதான் Nasdaq மற்றும் Bitcoin போன்றவற்றை உயர்த்துகிறது" என்று விளக்கினார்.
10x Research-ன் நிறுவனர் Markus Thielen, "Bitcoin போன்ற டிஜிட்டல் சொத்துக்கள், நிதி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திலிருந்து விலகி, பெரும் செல்வந்தர்களின் கைகளில் குவிந்து வருகிறது. இது பங்குச்சந்தையிலும் காணப்படுகிறது" என்கிறார்.
Bitget CEO Gracy Chen, இந்த ஏற்றத்தாழ்வு தொடரும் என்றும், டிஜிட்டல் சொத்துக்கள் வருமானத்தை ஈர்க்கும் வகையில் முதலீடுகளை ஈர்க்கின்றன, ஆனால் பணவியல் கொள்கை மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் (Regulations) மூலம் இதில் ரிஸ்க் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
