2027 ஜனவரி முதல் இந்தியாவின் Carbon Credit Trading Scheme-ஐ இங்கிலாந்து அங்கீகரிக்கிறது. இதனால் Steel, Cement ஏற்றுமதியாளர்களுக்கு இரட்டை வரி சுமை குறைய வாய்ப்புள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய நிம்மதி
பிரிட்டன் அரசு, இந்தியாவின் Carbon Credit Trading Scheme (CCTS)-ஐ ஒரு அதிகாரப்பூர்வமான கார்பன்-விலை நிர்ணய முறையாக்க ஏற்றுக்கொண்டுள்ளது. இது 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் Carbon Border Adjustment Mechanism (CBAM)-ல் இருந்து இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதுகாப்பை வழங்கும்.
முன்பு, இந்திய நிறுவனங்கள் உள்நாட்டில் கார்பன் வரி செலுத்திவிட்டு, இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும்போது மீண்டும் அந்த நாட்டுக்கு வரி செலுத்த வேண்டிய சூழல் (Double Taxation) இருந்தது. தற்போது இந்த அறிவிப்பின் மூலம், இந்திய நிறுவனங்கள் தாங்கள் ஏற்கனவே செலுத்திய கார்பன் கட்டணத்திற்கு வரி விலக்கு கோர முடியும். இது சர்வதேச சந்தையில் நமது ஸ்டீல் மற்றும் சிமெண்ட் விலையை போட்டித்தன்மை மிக்கதாக மாற்றும்.
அரசின் முக்கிய நடவடிக்கைகள்
மும்பையில் நடந்த Global Fintech Fest-ல் பேசிய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால், இது இந்தியத் தொழில்துறையைப் பாதுகாப்பதற்கான முக்கிய நடவடிக்கை என்றார். இது நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் இலவச பாஸ் அல்ல, மாறாக உள்நாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் நிறுவனங்கள் வெளிநாட்டு வரிகளால் தண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் முறையாகும்.
பிற சர்வதேச வர்த்தக டீல்கள்
இந்தியாவின் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வேகமாக நடந்து வருகின்றன:
- US: அமெரிக்காவுடனான நீண்ட நாள் வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
- Chile: தென் அமெரிக்காவில் சந்தையை விரிவுபடுத்தும் வகையில் சிலி நாட்டுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வருகிறது.
- New Zealand: நியூசிலாந்துடனான Free Trade Agreement 2026 அக்டோபர் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள் எல்லாம் இந்திய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி முறையை பசுமை எரிசக்தி (Green Energy) நோக்கி மாற்றுவதன் அவசியத்தை உணர்த்துகின்றன. சரியான முறையில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள், உலகளாவிய வர்த்தகத்தில் தங்களின் லாப வரம்பை (Profit Margins) சிறப்பாகத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
