இந்தியாவின் Carbon Credit Trading Scheme-ஐ ஏற்றுக்கொண்டது UK அரசாங்கம். இதன் மூலம் 2027 முதல் அமலுக்கு வரும் CBAM விதிகளால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் இரட்டை வரிச் சுமை தவிர்க்கப்படும்.
பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவின் உள்நாட்டு Carbon Credit Trading Scheme-ஐ (CCTS) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. ஜனவரி 1, 2027 முதல் அமல்படுத்தப்படவுள்ள Carbon Border Adjustment Mechanism (CBAM) வரி விதிப்பில் இருந்து இந்திய நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாகும்.
எந்தெந்த நிறுவனங்களுக்கு லாபம்?
எஃகு (Steel), அலுமினியம், சிமெண்ட், உரங்கள் மற்றும் ஹைட்ரஜன் போன்ற அதிக ஆற்றல் தேவைப்படும் துறைகளில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு இந்த முடிவு நேரடியாக உதவும். இதற்கு முன்பு, இந்தியாவில் கார்பன் வரியைச் செலுத்திவிட்டு, இங்கிலாந்து செல்லும்போதும் மீண்டும் வரி செலுத்த வேண்டிய 'இரட்டை வரி' (Double Taxation) அபாயம் இருந்தது. இப்போது அந்த கூடுதல் சுமை நீங்குவதால், சர்வதேச சந்தையில் இந்திய பொருட்களின் விலை போட்டித்தன்மையுடன் இருக்கும்.
கவனிக்க வேண்டிய நடைமுறைகள்
இந்த சலுகை தானாகக் கிடைக்காது. இந்திய நிறுவனங்கள் தாங்கள் ஏற்கனவே இந்தியாவில் செலுத்திய கார்பன் வரியை முறையாக ஆவணப்படுத்த வேண்டும். UK கருவூலம் ஒவ்வொரு நிறுவனத்தின் கோரிக்கையையும் தனித்தனியாக ஆய்வு செய்யும் என்பதால், ஆவணங்கள் தெளிவாக இருப்பது மிக அவசியம்.
EU சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா?
UK-ன் இந்த முடிவு, தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) இந்தியா நடத்தி வரும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட். இந்திய சுற்றுச்சூழல் கொள்கைகள் உலகத் தரத்திற்கு இணையாக உள்ளன என்பதை நிரூபிக்க இது உதவும். இருப்பினும், EU அதே சலுகையை வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எஃகு மற்றும் அலுமினியத் துறை முதலீட்டாளர்கள் இனி வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை உன்னிப்பாகக் கவனிப்பது அவசியம்.
