பணிச்சூழல் மாற்றங்களும் பெரும் சுமையேற்றமும்
முன்பு போல 60 வயது வரை நிரந்தர வேலை, பென்ஷன் என வாழ்க்கை அமைந்த காலம் மாறி வருகிறது. இப்போது, நிறுவனங்கள் நிரந்தர வேலை வாய்ப்புகளைக் குறைத்து, ஊழியர்கள் மீது மூன்று தசாப்த கால ஓய்வு காலத்திற்கான நிதிச் சுமையை ஏற்றியுள்ளன. Systematic Investment Plans (SIP) மற்றும் பங்குச்சந்தை வர்த்தக தளங்கள் எளிதாகி இருந்தாலும், இதிலுள்ள ஆபத்துகள் அதிகம். இன்றைய இளைஞர்கள், பங்குச்சந்தையின் ஏற்ற காலங்களுக்கு ஏற்ப முதலீடுகளை பெருக்கினாலும், தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலை (Stagflation) மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சமாளிக்கத் தயாராக இல்லை. 'வேலை செய்யத் தேவையில்லாத' வாழ்க்கை முறைக்கான கணிப்புகள், பெரும்பாலும் ஆண்டுக்கு 12% முதல் 15% வரை பங்குச்சந்தை வருமானத்தை எதிர்பார்க்கின்றன. ஆனால், எதிர்பாராத சந்தை வீழ்ச்சிகள் (Black-swan events) ஓய்வு கால நிதியை காலியக்கிவிடலாம்.
