திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?
இந்த திடீர் அறிவிப்பிற்கு முக்கிய காரணம், அரசின் நிதிநிலை மீது எதிர்பார்க்கப்படும் அழுத்தங்கள்தான். 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் 4.3% fiscal deficit ஐ இலக்காகக் கொண்டாலும், செலவுகள் 7.7% அதிகரித்து ₹53.47 லட்சம் கோடி ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, உர மானியங்களுக்கு ₹1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹10 குறைத்தது, ஆண்டுக்கு ₹1.5-1.6 லட்சம் கோடி கூடுதல் செலவை ஏற்படுத்தும்.
மேற்காசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் இரு மடங்காக உயர்ந்துள்ளன. இது எரிசக்தி மற்றும் உர விநியோகச் சங்கிலியையும் பாதித்துள்ளது. இதனால், மானிய செலவுகள் அதிகரிப்பதுடன், வர்த்தகப் பற்றாக்குறை (Current Account Deficit) அதிகரிக்கவும், ரூபாய் மதிப்பு குறையவும் வாய்ப்புள்ளது.
நிதிநிலை ஆரோக்கியம் குறித்து கவலைகள்
WMA வரம்பை அதிகரித்தது, எரிபொருள் விலை குறைப்பு, உலகப் பொருளாதாரப் பதற்றம் ஆகியவை அரசின் நிதிநிலை ஆரோக்கியம் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. 2026-27 நிதியாண்டில் fiscal deficit ஐ 4.3% ஆக குறைக்கும் இலக்கு சவாலுக்கு உள்ளாகலாம். மேலும், மத்திய அரசின் கடன்-GDP விகிதத்தை 55.6% ஆக வைத்திருக்கும் இலக்கிலும் பாதிப்பு ஏற்படலாம்.
கடன் சந்தை மற்றும் அரசின் வியூகம்
10 ஆண்டு அரசுப் பத்திரத்தின் yield 6.94% ஆக உயர்ந்துள்ளது. 2026-27 நிதியாண்டின் முதல் பாதியில், அரசு ₹8.20 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட குறைவாகும். இந்த வியூகம் கடன் சந்தையை நிலைநிறுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால நோக்கில், மத்திய அரசின் கடன்-GDP விகிதத்தை 2031 க்குள் 50% ஆக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.