பெரு அடுத்த ஆண்டுக்குள் இந்தியா வழங்கும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) போன்ற ஒரு நிகழ்நேர டிஜிட்டல் பேமெண்ட்ஸ் சிஸ்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL) மற்றும் பெருவின் மத்திய ரிசர்வ் வங்கி (BCRP) ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம், பெரு UPI தொழில்நுட்பத்தை பின்பற்றும் முதல் தென் அமெரிக்க நாடாக மாறும். இதன் நோக்கம் நிதி உள்ளடக்கத்தை அதிகரிப்பதும், டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாட்டை விரிவுபடுத்துவதும் ஆகும்.