இந்தியாவில் AI தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் 42 நிறுவனங்களின் கேபிடல் செலவினம் **65%** வரை உயரக்கூடும் என ஒரு புதிய ரிப்போர்ட் தெரிவிக்கிறது. பவர், டேட்டா சென்டர் மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் இந்த முதலீடு குவிய உள்ளது.
இந்தியாவின் AI பயணம் இப்போது மென்பொருளைத் தாண்டி, கனரக தொழில்துறை உள்கட்டமைப்பை (Industrial Infrastructure) நோக்கி நகர்கிறது. Goldman Sachs வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வின்படி, 2026 ஆம் ஆண்டில் AI-க்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் 42 இந்திய நிறுவனங்களின் மொத்த முதலீடு 65% அளவுக்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எங்கே கொட்டப்போகிறது பணம்?
2025-ல் இந்த வளர்ச்சி 18% ஆக இருந்த நிலையில், 2026-ல் அது பல மடங்கு உயர்கிறது. மின் உற்பத்தி (Power Generation), டேட்டா சென்டர் செயல்பாடுகள் மற்றும் செமிகண்டக்டர் அசெம்பிளி ஆகிய துறைகளே இந்த முதலீட்டு வேட்டைக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. இவை மட்டும் Nifty 500 குறியீட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு 6% பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு: ரிஸ்க் என்ன?
இந்த நிறுவனங்கள் தற்போது 36 மடங்கு பார்வேர்ட் ஏர்னிங்ஸில் (Forward Earnings) வர்த்தகம் செய்யப்படுகின்றன. இது MSCI India குறியீட்டை விட 85% அதிகம். எனினும், PEG ரேஷியோ 1.3 ஆக இருப்பது, இந்த நிறுவனங்களின் வளர்ச்சி வேகம் மிக அதிகமாக இருக்கும் என்பதையே காட்டுகிறது.
இருப்பினும், இவ்வளவு பெரிய திட்டங்களை செயல்படுத்தும்போது காலதாமதம் மற்றும் செலவு அதிகரிப்பு (Cost Overruns) போன்ற சவால்கள் ஏற்படலாம். இத்தகைய நிறுவனங்கள் தங்கள் நிதிநிலையை பாதிக்காமல் எப்படி லாபத்தை ஈட்டப்போகின்றன என்பதையும், இந்த பவர் மற்றும் டேட்டா சென்டர் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் செயல்பாட்டுக்கு வருகிறதா என்பதையும் கவனிப்பது அவசியம்.
