இந்திய ரூபாய் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மதிப்பு குறைந்து (undervalued) வருகிறது. ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, அக்டோபரில் ரியல் எஃபெக்டிவ் எக்ஸ்சேஞ்ச் ரேட் (REER) 97.47 ஆகக் குறைந்துள்ளது. குறைந்த உள்நாட்டு பணவீக்கம் மற்றும் வலுவற்ற ஸ்பாட் நாணயம் (spot currency) காரணமாக இந்த தொடர் மதிப்பு வீழ்ச்சி, இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்திறனுக்கு சாதகமாக உள்ளது. பணவீக்கம் அதிகரிக்கும்போது இந்த நிலை மாறக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராகவும் சமீபத்தில் வரலாற்று வீழ்ச்சியை எட்டியுள்ளது.