இந்திய ஐடி நிறுவனங்களில் பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. வெறும் கோடிங் மட்டும் தெரிந்தவர்களை விட, பிசினஸ் மற்றும் டெக் இரண்டையும் கையாளும் 'Polymath' இன்ஜினியர்களுக்குதான் இப்போது டிமாண்ட் அதிகம்.
இந்தியாவின் ஐடி துறை இப்போது ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. வழக்கமான கோடிங் மற்றும் டெஸ்டிங் வேலைகளை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) எடுத்துக்கொண்டதால், பழைய மாடல் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இனி நிறுவனங்களுக்கு வெறும் டெக் ஸ்பெஷலிஸ்ட்கள் மட்டும் போதாது, பிசினஸ் ஸ்ட்ரேட்டஜி மற்றும் செக்யூரிட்டி இரண்டையும் அறிந்த 'Polymath' இன்ஜினியர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஹைபிரிட் இன்ஜினியரிங் ஏன் அவசியம்?
முன்பெல்லாம் ஒரு புராஜெக்ட்டிற்கு பெரிய அளவில் ஜூனியர் ஊழியர்களை அமர்த்துவார்கள். ஆனால் இன்று AI ஏஜெண்டுகள் பல குழுக்களின் வேலையை எளிதாகச் செய்து முடிக்கின்றன. இதனால், சிஸ்டத்தை நிர்வகிக்கும் திறன் கொண்ட 'T-shaped' அல்லது ஹைபிரிட் ஸ்கில் உள்ளவர்களுக்கே கம்பெனிகள் முன்னுரிமை அளிக்கின்றன. இது இன்ஜினியர்களை நீக்குவதற்கான வழி அல்ல, மாறாக அவர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி.
லாபம் vs பயிற்சி செலவு
இந்த மாற்றம் ஐடி நிறுவனங்களின் லாபத்தை (Profitability) அதிகரிக்க உதவும். குறைந்த ஊழியர்களைக் கொண்டு அதிக உற்பத்தியை (Productivity) எட்டினால், நிறுவனங்களின் ஆபரேட்டிங் மார்ஜின் (Operating Margin) உயரும். இருப்பினும், இத்தகைய திறமையானவர்களைக் கண்டறிவது கஷ்டம் என்பதால், சம்பள உயர்வு மற்றும் பயிற்சி செலவுகள் நிறுவனங்களுக்கு ஒரு சவாலாக இருக்கும்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
இனி வரும் காலங்களில் ஐடி நிறுவனங்களின் ரிசல்ட்டைப் பார்க்கும்போது வெறும் ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டும் பார்க்காதீர்கள்.
- Revenue per employee: இது நிறுவனத்தின் உற்பத்தித் திறனை உணர்த்தும்.
- Operating margin trends: நிறுவனங்கள் AI-ஐ எப்படி லாபமாக மாற்றுகின்றன என்பதை இது காட்டும்.
- Upskilling programs: நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை எவ்வளவு வேகமாக மாற்றத்திற்குத் தயார் செய்கின்றன என்பதை நிர்வாகத்தின் கமெண்ட்டுகள் மூலம் கவனியுங்கள்.
