உலகளாவிய AI மற்றும் டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்க, BRICS நாடுகளுடன் இணைந்து பிரம்மாண்டமான சூப்பர் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு மற்றும் ஸ்டார்ட்அப் நிதியை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறவுள்ள 18-வது BRICS உச்சிமாநாட்டின் முக்கிய அஜெண்டாவாக தொழில்நுட்ப வளர்ச்சி உருவெடுத்துள்ளது. சர்வதேச டெக் ஜாம்பவான்களின் பிடியிலிருந்து விடுபட்டு, டிஜிட்டல் சுதந்திரத்தை (Digital Sovereignty) நிலைநாட்ட இந்தியா முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.
GRAIN - ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சி
இந்தத் திட்டத்தின் மையமாக 'Global Research Advanced Infrastructure Network' (GRAIN) என்ற பிளாட்ஃபார்ம் அமைகிறது. இதன் மூலம், மெம்பர் நாடுகள் இணைந்து சூப்பர் கம்ப்யூட்டர்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். தனித்தனியாகச் செலவு செய்வதற்குப் பதிலாக, வளங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் AI மாடல்களை உருவாக்குவதற்கான தடைகளை உடைக்க இது உதவும். ஏற்கனவே இந்தியாவால் செயல்படுத்தப்பட்டு வரும் 'IndiaAI Mission'-ன் அனுபவத்தை இதிலும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள்
ஆராய்ச்சி தரவுகளைப் பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி, 'BRICS Startup Innovation Fund' என்ற புதிய நிதியையும், இன்குபேட்டர் நெட்வொர்க்கையும் தொடங்க அரசு ஆர்வம் காட்டி வருகிறது. UPI, Aadhaar போன்ற இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வெற்றியை, செமிகண்டக்டர் மற்றும் டீப்-டெக் துறைகளிலும் கொண்டு வர இந்த முயற்சி உதவும்.
சிப் டிசைன் (Chip Design), ஹார்டுவேர் மேனுஃபேக்ச்சரிங் மற்றும் AI சார்ந்த சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் நீண்டகாலத்தில் பெரும் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும். இருப்பினும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடுகள் குறித்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.
