எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்?
இந்த கொள்கை மாற்றம் குறிப்பாக சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான், பூடான், நேபாளம், மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் முதலீடுகளைப் பாதிக்கும். இதற்கு முன்பு, இந்த நாடுகளில் பங்குதாரர்களைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் எந்தத் துறையிலும் முதலீடு செய்ய அரசாங்கத்தின் கட்டாய அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.
ஏன் இந்த மாற்றம்?
இந்த மூலோபாய மாற்றம், முதலீட்டு அனுமதிகளை விரைவுபடுத்துவதோடு, இணக்கச் சுமைகளையும் (Compliance Burden) குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழில்நுட்ப அணுகல் (Technology Access) அதிகரிக்கும் என்றும், உற்பத்தித் துறையின் விரிவாக்கத்திற்கு ஆதரவு கிடைக்கும் என்றும், உலகளாவிய சப்ளை செயின்களுடன் (Global Supply Chains) ஆழமான ஒருங்கிணைப்பு ஏற்படும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது. இந்த முதலீட்டு வரத்து, உள்நாட்டு மூலதனத்திற்குப் பக்கபலமாக அமைந்து, 'ஆத்மநிர்பார் பாரத்' (Atmanirbhar Bharat) திட்டத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய விதிமுறைகள் என்ன?
FDI தளர்வுடன், 'பயனாளி உரிமையாளர்' (Beneficial Owner) என்பதற்கு ஒரு தெளிவான வரையறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பணமோசடி தடுப்புச் சட்டங்களுடன் (Prevention of Money Laundering Rules) ஒத்துப்போகிறது. இந்த சோதனை முதலீட்டு நிறுவனத்தின் மட்டத்தில் (Investor Entity Level) பயன்படுத்தப்படும். மேலும், குறிப்பிட்ட துறைகளான கேப்பிடல் குட்ஸ், எலக்ட்ரானிக் கேப்பிடல் குட்ஸ், எலக்ட்ரானிக் காம்போனென்ட்ஸ், பாலிசிலிகான் மற்றும் இங்காட்-வேஃபர் உற்பத்தி போன்ற துறைகளில், நில எல்லைகளைப் பகிரும் நாடுகளின் முதலீடுகளுக்கு 60 நாட்கள் கால அவகாசத்தில் அனுமதி வழங்கப்படும்.