இந்த தாமதத்திற்குக் காரணம், இரண்டு மாத தாமதத்துடன் கிடைக்கும் அத்தியாவசியமான தரவுகளைச் சேர்ப்பதுதான். குறிப்பாக, நிறுவனங்கள் நிதி ஆண்டு முடிந்த 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும் தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகள் (audited financial results) தாமதமாக வந்து சேர்கின்றன.
அதேபோல, மத்திய அரசின் முக்கிய நிதி சார்ந்த தகவல்களான மார்ச் மாத வருவாய், மூலதனச் செலவினங்கள் (capital expenditure), வரிகள், மானியங்கள் மற்றும் வட்டி செலுத்துதல்கள் போன்றவையும் இறுதியாக மே மாத இறுதியில் தான் முழுமையாகத் தொகுக்கப்படுகின்றன.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO), தேசிய கணக்குகள் புள்ளியியல் குறித்த ஆலோசனைக் குழுவுடன் (ACNAS) கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளது. தரமான மற்றும் நம்பகமான புள்ளிவிவரங்களை உறுதி செய்வதற்கும், சர்வதேச தரங்களுக்கு ஏற்ப தேசிய கணக்குகளைத் தொகுப்பதற்கும் NSO இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
