இந்திய IT துறையில் AI-யின் ஆதிக்கத்தை விட, வேகமாக வளர்ந்து வரும் 'Global Capability Centres' (GCC) மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்று Morgan Stanley ஆய்வு கூறுகிறது.
இந்திய IT பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் AI-யைப் பற்றி கவலைப்படும் வேளையில், Morgan Stanley ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பெருநிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்பப் பணிகளைத் தாங்களே கவனித்துக்கொள்ள உருவாக்கும் 'Global Capability Centres' (GCC) தான் தற்போதைய மிகப்பெரிய அச்சுறுத்தல்.
GCC-யால் என்ன பாதிப்பு?
முன்பெல்லாம் பெரிய நிறுவனங்கள் தங்கள் டெக் பணிகளை இந்திய IT நிறுவனங்களுக்கு Outsourcing முறையில் கொடுக்கும். ஆனால் இப்போது, நிறுவனங்களே இந்தியாவில் நேரடியாக GCC-க்களைத் திறந்து, தங்களின் உயர் மதிப்புள்ள பணிகளை (High-value work) உள்ளேயே (In-house) வைத்துக்கொள்கின்றன. இதனால் பாரம்பரிய IT சேவை நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சந்தை என்ன சொல்கிறது?
Morgan Stanley-ன் Ridham Desai கருத்துப்படி, IT பங்குகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் வெறும் ஊகங்களின் அடிப்படையில் (Speculative fears) உள்ளனவே தவிர, வருமான ரீதியான பாதிப்புகள் இன்னும் பெரிய அளவில் இல்லை. AI-யால் வருமானம் குறையும் என்ற பயம் இன்னும் ஒரு தியரியாகவே உள்ளது.
3P Investment Managers-ன் Prashant Jain-ன் கூற்றுப்படி, இந்தியாவில் IT துறை சுமார் 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. இது மொத்த உள்நாட்டு வேலைவாய்ப்பில் சிறிய பகுதிதான். எனவே, AI-யால் ஒருவேளை வேலைவாய்ப்பு சுருங்கினாலும், அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்காது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
முதலீட்டாளர்கள் இனி கவனிக்க வேண்டியது, IT சேவை நிறுவனங்களால் தங்களின் Pricing Power-ஐ தக்கவைக்க முடியுமா என்பதுதான். வாடிக்கையாளர்கள் சொந்தமாகவே GCC-க்களைத் தொடங்கும் வசதி எளிதாகிவிட்டதால், IT நிறுவனங்கள் புதிய ப்ராஜெக்ட்களைப் பிடிப்பதில் இனி அதிக சவாலைச் சந்திக்கும். வரும் காலாண்டு முடிவுகள் மற்றும் நிர்வாகத்தின் கருத்துக்களே இந்த மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்தும்.
