EPFO: குடும்பங்களுக்கு ஒரு நிதிப் பாதுகாப்பு
EPFO (Employees' Provident Fund Organisation) கீழ் வரும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS), தனியார் துறை ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு முக்கிய பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது. குறிப்பாக, ஊழியர் 58 வயதை எட்டுவதற்கு முன்பே மரணமடைந்தால், இந்த சலுகைகள் மிகவும் அவசியமானவை.
10 வருடங்களுக்கு மேல் பணிக்காலம்: மனைவி & குழந்தைகளுக்குப் பலன்
ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 10 வருடங்கள் பணிபுரிந்திருந்தால், அவரது மரணத்திற்குப் பிறகு, மனைவிக்கு 58 வயதிலிருந்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். இது இறந்த ஊழியரின் ஓய்வூதியத் தொகையில் 50% ஆக இருக்கும். மறுமணம் செய்யும் வரை இந்த ஓய்வூதியம் தொடரும். மேலும், மாதந்தோறும் குறைந்தபட்சம் ₹1,000 ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களது குழந்தைகளுக்கு 25 வயது ஆகும் வரை, ஒவ்வொரு குழந்தைக்கும் மனைவியின் ஓய்வூதியத்தில் 25% ஓய்வூதியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இந்த ஓய்வூதியம் வாழ்நாள் முழுவதும் தொடரும். பெற்றோர்கள் இருவருமே இறந்துவிட்டால், குழந்தைகளுக்கு தலா 75% orphan pension வழங்கப்படும்.
10 வருடங்களுக்கும் குறைவான பணிக்காலம்: Withdrawal Benefit
ஊழியர் 10 வருடங்களுக்கும் குறைவான காலம் பணிபுரிந்து இறந்திருந்தால், அவரது குடும்பத்திற்கு மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்காது. அதற்குப் பதிலாக, அவர்கள் Withdrawal Benefit க்ளைம் செய்யலாம். இது உறுப்பினரின் சம்பளம் மற்றும் பணி காலத்தைப் பொறுத்து கணக்கிடப்படும். தகுதியான குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லையென்றால், நாமினி அல்லது இறந்த உறுப்பினரின் சார்ந்திருக்கும் பெற்றோர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும்.
ஓய்வூதியத்தைத் தாண்டிய பிற சலுகைகள்: EPF & EDLI
மாதந்தோறும் கிடைக்கும் ஓய்வூதியத்தைத் தவிர, நாமினிகளுக்கு இறந்த ஊழியரின் EPF (Employees' Provident Fund) கணக்கில் உள்ள மொத்தத் தொகையும், அதற்கான வட்டியும் கிடைக்கும். மேலும், EDLI (Employees' Deposit Linked Insurance) திட்டத்தின் கீழ் கூடுதல் Lump sum தொகை வழங்கப்படும். சமீபத்திய விதிமுறைப்படி, பணியில் இருக்கும்போது இறந்த ஊழியர்களுக்கு இந்த EDLI மூலம் ₹2.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹7 லட்சம் வரை க்ளைம் செய்ய முடியும்.
சலுகைகளை க்ளைம் செய்வது எப்படி?
EPS சலுகைகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் க்ளைம் செய்யலாம். ஆன்லைன் க்ளைம்களுக்கு, EPFO Unified Member Portal-க்கு சென்று, இறந்த உறுப்பினரின் UAN மற்றும் தங்களது ஆதார் விவரங்களை அளித்து, மொபைல் நம்பரை வெரிஃபை செய்து, தேவையான ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டும். ஆஃப்லைன் க்ளைம்களுக்கு, Composite Claim Form-ஐ டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்து, முதலாளியிடம் அtest செய்து, அதை அருகில் உள்ள EPFO அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேவையான முக்கிய ஆவணங்களில் இறப்புச் சான்றிதழ், ஆதார், PAN கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் குடும்ப அல்லது வாரிசு சான்றிதழ்கள் அடங்கும்.
