ஓய்வூதிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: EPF தேதி பிழைகள்
இந்த EPF தேதி பிழைகள் வெறும் நிர்வாகத் தவறுகள் அல்ல. இவை இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிதி நிலைமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. இந்த தேதிகளில் உள்ள குளறுபடிகள், ஓய்வூதியப் பலன்களின் கணக்கீடுகளை நேரடியாகப் பாதிக்கின்றன. இதனால், எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் தொகையே கிடைக்க வாய்ப்புள்ளது.
எப்படி ஓய்வூதியம், வரி பாதிக்கப்படுகிறது?
Employee Pension Scheme (EPS)-ல் மாதந்தோறும் பென்ஷன் கிடைக்க, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தொடர்ச்சியான பணி அனுபவம் தேவை. ஆனால், தவறான Date of Exit (DOE) அல்லது Date of Joining (DOJ) இருந்தால், உங்கள் 'Pensionable Service' காலம் தவறாகக் கணக்கிடப்படும். இதனால், மாத ஓய்வூதியம் = (Pensionable Salary × Pensionable Service) / 70 என்ற ஃபார்முலாவின்படி, கிடைக்க வேண்டிய பென்ஷன் தொகை கணிசமாகக் குறையும்.
மேலும், பணியின் கால அளவு 5 ஆண்டுகளுக்குக் குறைவாக இருப்பதாக தவறான தேதிகளால் பதிவானால், நீங்கள் எடுக்கும் PF பணத்திற்கு Tax Deducted at Source (TDS) பிடித்துக்கொள்ளப்படும். இது க்ளைம்கள் நிராகரிக்கப்படவும், ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர் செய்வதில் தாமதம் ஏற்படவும் முக்கியக் காரணமாகிறது.
பிரச்சனையின் அளவு என்ன? காரணங்கள் என்ன?
Employee Provident Fund Organisation (EPFO) சுமார் 27 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களின் ஓய்வூதிய சேமிப்பைக் கையாண்டு வருகிறது. இவ்வளவு பெரிய தரவுகளைச் சரியாக வைத்திருப்பது ஒரு பெரிய சவால். இதற்குக் காரணம், பல முதலாளிகள் ஊழியர்கள் வேலையை விட்டுச் சென்றதும் உடனடியாக Date of Exit-ஐப் புதுப்பிக்கத் தவறுவதுதான். சில சமயங்களில், பழைய EPF கணக்குகளை சரியாக இணைக்காததும், சாதாரண டேட்டா என்ட்ரி பிழைகளும் கூட காரணமாகின்றன.
பிழைகளைச் சரிசெய்வதில் உள்ள சவால்கள்
EPFO-வின் டிஜிட்டல் கருவிகள் மூலம் பிழைகளைச் சரிசெய்ய முடியும் என்றாலும், பல முக்கியப் புதுப்பிப்புகளுக்கு முதலாளிகளின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இதனால், பிழைகளைச் சரிசெய்ய நீண்ட தாமதம் ஏற்படுகிறது. முதலாளி ஒத்துழைக்கவில்லை என்றாலோ, அல்லது அந்த கம்பெனி இப்போது இல்லை என்றாலோ, ஊழியர்களுக்கு இது பெரிய சிக்கலாகிவிடும். இதனால், அவர்கள் தகுதியான ஓய்வூதியத்தையோ அல்லது PF தொகையையோ இழக்கும் அபாயம் உள்ளது.
EPFO-வின் முயற்சிகளும் ஊழியர்களின் பங்கும்
EPFO-வில் UAN-ஐ ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால், சில சுய-சரிபார்ப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளது. ஆனாலும், முதலாளிகளின் ஒத்துழைப்பு இன்றும் முக்கியமாக உள்ளது. ஊழியர்கள், குறிப்பாக வேலை மாறும்போதும், ஓய்வு பெறும் காலத்திலும், தங்களின் Date of Joining மற்றும் Date of Exit ஆகியவற்றை EPFO போர்ட்டலில் தவறாமல் சரிபார்ப்பது அவசியம். நீண்ட கால ஓய்வூதியத் திட்டத்தின் ஆரோக்கியத்திற்கு, இதுபோன்ற தேதிப் பிழைகளைச் சரிசெய்வதும், சரியான நேரத்தில் பங்களிப்பு செய்வதும் மிக முக்கியம்.