Aadhaar உடன் இணைக்கப்பட்ட பழைய மொபைல் நம்பர் காரணமாக OTP வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வருமான வரி இ-வெரிஃபிகேஷன், வங்கி பரிமாற்றங்கள் மற்றும் டிரேடிங் கணக்குகளில் நீங்கள் லாக்-அவுட் ஆக வாய்ப்புள்ளது. UIDAI தரவுகளில் உங்கள் விவரங்களை உடனே அப்டேட் செய்வது அவசியம்.
இந்தியாவின் டிஜிட்டல் நிதி உலகில், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தான் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் அடிப்படை. இந்த எண் சரியாக இல்லையெனில், உங்கள் நிதி கணக்குகளை நீங்களே அணுக முடியாத இக்கட்டான சூழல் உருவாகும்.
நிதி பரிவர்த்தனைகளில் சிக்கல்
ஒன்-டைம் பாஸ்வேர்டு (OTP) தான் தற்போதைய பாதுகாப்பு அரண். உங்கள் ஆதார் டேட்டாபேஸில் உள்ள மொபைல் எண் மாற்றப்படாமல் இருந்தால், முக்கிய வங்கி பரிமாற்றங்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்யும் போது இ-வெரிஃபிகேஷன் செய்ய முடியாமல் போகும். இது அபராதத்திற்கு கூட வழிவகுக்கலாம்.
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை
பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்களுக்கு இது மிகவும் முக்கியம். உங்கள் Demat கணக்கில் உள்ள மொபைல் எண்ணும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது KYC விதிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஒத்துப்போகவில்லை எனில், உங்கள் டிரேடிங் கணக்கை வங்கி அல்லது புரோக்கரேஜ் நிறுவனங்கள் 'Inactive' என முடக்க வாய்ப்புள்ளது.
எப்படி சரி செய்வது?
உங்கள் பழைய சிம் கார்டு உங்கள் கைவசம் இருந்தால், ஆன்லைன் மூலமாகவே எளிதாக அப்டேட் செய்யலாம். ஒருவேளை அந்த நம்பர் கிடைக்கவில்லை என்றால், அருகில் உள்ள Aadhaar Seva Kendra-விற்கு நேரில் சென்று பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்ய வேண்டும்.
அங்கே விண்ணப்பித்தவுடன் உங்களுக்கு URN (Update Request Number) வழங்கப்படும். இதை வைத்து உங்கள் அப்டேட் ஸ்டேட்டஸை நீங்கள் டிராக் செய்யலாம். நிதிச் சிக்கல்களைத் தவிர்க்க, உங்கள் ஆதார் போர்ட்டலில் தற்போது எந்த எண் இணைந்துள்ளது என்பதை இப்போதே சரிபார்க்கவும்.
