Generative AI தொழில்நுட்பத்தால் உலகளவில் டெக் மற்றும் கன்சல்டிங் துறைகளில் ஆட்கேர்ப்பு வேகம் குறைந்துள்ளது. இது இந்திய IT நிறுவனங்களின் வருவாய் மாடலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் கனடா போன்ற நாடுகளில் டெக் மற்றும் சாப்ட்வேர் நிறுவனங்கள் புதிய பணியாளர்களை எடுப்பதைக் குறைத்து வருகின்றன. Goldman Sachs வெளியிட்ட சமீபத்திய தரவுப்படி, AI டூல்ஸ்களின் வருகையால் பழையபடி அதிக நபர்களை வைத்து வேலை செய்யும் முறை மாறி வருகிறது.
இந்திய IT-க்கு விடுக்கப்படும் எச்சரிக்கை
இதுவரை இந்திய IT நிறுவனங்கள் "Pyramid Model" எனப்படும், அதிக எண்ணிக்கையிலான ஜூனியர் ஊழியர்களைக் கொண்டு செயல்படும் முறையைத் தான் பின்பற்றி வந்தன. ஆனால், இப்போது வாடிக்கையாளர்கள் AI மூலம் வேலையை விரைவாகவும், குறைந்த செலவிலும் முடிக்க விரும்புகிறார்கள். இதனால், ஆட்களை அதிகரிப்பதன் மூலம் வருவாயை ஈட்டும் காலம் மெல்ல முடிவுக்கு வரலாம்.
லாபம் vs சவால்கள்
நிறுவனங்கள் AI மூலம் ஆட்டோமேஷன் செய்வதால், ஊழியர்களுக்கான சம்பளச் செலவு குறைந்து, நெட் ப்ராஃபிட் மார்ஜின் (Profit Margin) உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், சில பெரிய சவால்கள் உள்ளன:
- Billing Model: மணி கணக்கிலோ அல்லது ஆட்களின் எண்ணிக்கையிலோ கட்டணம் வசூலிக்கும் முறை மாறி, 'அவுட்கம்' (Outcome) அடிப்படையிலான கட்டண முறையை வாடிக்கையாளர்கள் கோரலாம்.
- Upskilling Cost: தற்போதுள்ள ஊழியர்களுக்கு AI-க்கு ஏற்ப பயிற்சி அளிப்பது நிறுவனங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும்.
- Junior Hiring: ஜூனியர் நிலையில் ஆட்களை எடுப்பது குறைந்தால், எதிர்காலத்துக்கான திறமையான ஊழியர்களை உருவாக்குவதில் சிக்கல் ஏற்படலாம்.
முதலீட்டாளர்கள் இனி வரும் காலாண்டு முடிவுகளின் போது, நிர்வாகங்கள் இந்த மாற்றத்தை எப்படி கையாளப்போகிறார்கள் மற்றும் ப்ராஃபிட் மார்ஜினை எப்படி பாதுகாக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
