8th Central Pay Commission தனது அடுத்தகட்ட ஆலோசனை கூட்டத்தை பெங்களூரில் அக்டோபர் 7 மற்றும் 8 தேதிகளில் நடத்தவுள்ளது. தகுதியுள்ள ஊழியர் சங்கங்கள் செப்டம்பர் 18-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கட்டமைப்பை மறுசீரமைக்க அமைக்கப்பட்ட 8th Central Pay Commission, தனது நாடு தழுவிய ஆலோசனை பயணத்தின் ஒரு பகுதியாக பெங்களூருக்கு வரவுள்ளது. அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இந்த முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களின் மெமோராண்டத்தை (Memorandum) சமர்ப்பித்து 'Unique Memo ID' பெற வேண்டும். இதற்கு செப்டம்பர் 18, 2026-ஐ இறுதி தேதியாக ஆணையம் நிர்ணயித்துள்ளது. இந்த ID இருந்தால்தான் மீட்டிங் ஸ்லாட்டை புக் செய்ய முடியும்.
ஏன் இந்த ஆலோசனைகள்?
டெல்லி, கொல்கத்தா, சண்டிகர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களைத் தொடர்ந்து, பெங்களூரில் நடைபெறும் இந்த கூட்டம், சம்பள உயர்வு மற்றும் அலவன்ஸ்கள் குறித்த இறுதி பரிந்துரைகளை வடிவமைக்க உதவும். கடந்த 2025 நவம்பர் 3-ம் தேதி அமைக்கப்பட்ட இந்த ஆணையம், சுமார் 18 மாத கால அவகாசத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தற்போது, தரவு ஆய்வாளர்களைக் கொண்டு பணிகளை வேகப்படுத்தியுள்ள இந்த ஆணையம், கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்கால நிதி நிலைத்தன்மையை தீர்மானிக்கும் மிக முக்கியமான பரிந்துரைகளை வழங்க உள்ளது.
