2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு Robert E. Hall மற்றும் Michael Woodford ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை சீரமைக்கும் கொள்கைகளை வடிவமைப்பதில் இவர்களது ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
ஸ்வீடன் நாட்டு ராயல் அகாடமி ஆஃப் சயின்சஸ், 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் Robert E. Hall மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் Michael Woodford ஆகியோருக்கு அறிவித்துள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகளை, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைகளுடன் இணைக்கும் இவர்களது கண்டுபிடிப்பு பொருளாதார உலகில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
மைக்ரோ மற்றும் மேக்ரோ பொருளாதாரத்தின் இணைப்பு
பல தசாப்தங்களாக, நாட்டின் ஜிடிபி (GDP), பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற மேக்ரோ பொருளாதாரக் கொள்கைகளை, தனிமனித நடத்தையோடு பொருத்திப் பார்ப்பது சவாலாக இருந்தது. Hall மற்றும் Woodford ஆகியோர், எதிர்கால எதிர்பார்ப்புகளை வைத்து தனிநபர்கள் எப்படி முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை விளக்கும் புதிய மாடல்களை உருவாக்கினர். இது அரசாங்கத்தின் திட்டங்கள் ஏன் சில நேரங்களில் தோல்வியடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
பாலிசி டூல்களை மாற்றியமைத்த ஆராய்ச்சி
Michael Woodford-இன் பங்களிப்பு பணவியல் கொள்கையில் (Monetary Policy) புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சந்தையில் விலை ஏன் உடனடியாக மாறுவதில்லை (Price Stickiness) என்பதை விளக்கிய இவர், 'Forward Guidance' என்ற முக்கியக் கருவியை உலகளாவிய மத்திய வங்கிகள் பயன்படுத்த வழிவகை செய்தார்.
இந்த 'Forward Guidance' முறை மூலம், மத்திய வங்கிகள் தங்கள் வருங்காலக் கொள்கைகளை பொதுமக்களுக்கும் தொழில்துறையினருக்கும் முன்கூட்டியே தெளிவாகக் தெரிவிக்கின்றன. இது வட்டி விகிதங்களை மாற்றாமலேயே, பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த ஆராய்ச்சி வெறும் கல்வி சார்ந்தது மட்டுமல்ல; இது தற்போதைய பொருளாதார சூழலில் மத்திய வங்கிகள் முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான ஒரு 'Intellectual Toolkit'-ஆக உள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் சப்ளை செயின் தடங்கல்கள் நிலவும் சூழலில், மக்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தியரிகள் வழிகாட்டுகின்றன.
