ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரொடக்ட்ஸ் லிமிடெட், 'Waggies' என்ற புதிய பிராண்டை அறிமுகம் செய்து, இந்தியாவின் அபரிமிதமாக வளர்ந்து வரும் பெட்-கேர் சந்தையில் கால் பதித்துள்ளது. இந்த பிராண்ட், அறிவியல் அடிப்படையிலான, உயர்தர செல்லப்பிராணி உணவுகளை கட்டுப்படியாகும் விலையில் வழங்கும். இதன் நோக்கம், சத்தான செல்லப்பிராணி உணவுகளை அதிக இந்திய குடும்பங்களுக்கு கிடைக்கச் செய்வதுடன், நெஸ்லே மற்றும் கோட்ரேஜ் கன்ஸ்யூமர் புரொடக்ட்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டி விலையில் சவால் விடுப்பதாகும்.