நிதி ஆண்டின் 2026 மூன்றாவது காலாண்டில் (Q3FY26), Zydus Wellness நிறுவனம் அசாதாரணமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை (Consolidated Net Sales) 113.7% உயர்ந்து ₹963.3 கோடி ஆக பதிவாகியுள்ளது. அதேபோல், வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகைக்கு முந்தைய வருவாய் (EBITDA) 312.2% விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து ₹61.0 கோடி-யை எட்டியுள்ளது. இந்த மாபெரும் வளர்ச்சிக்கு, சமீபத்தில் இந்நிறுவனம் கையகப்படுத்திய வணிகங்களும் முக்கியப் பங்காற்றியுள்ளன.
குறிப்பாக, சர்க்கரைக்கு மாற்றான (Sugar Substitute) சந்தையில் Zydus Wellness-ன் முக்கிய பிராண்டான 'Sugar Free' தனது ஆதிக்கத்தை மேலும் உறுதி செய்துள்ளது. இது சந்தையில் 96.3% பங்கைக் கொண்டுள்ளது. 'D'lite' ரேஞ்ச் விரிவாக்கம் மற்றும் Sugar Free Green-ன் தொடர்ச்சியான டபுள்-டிஜிட் க்ரோத் ஆகியவை இந்த சிறப்பான முடிவுகளுக்குக் காரணம்.
ஆய்வாளர்கள் பார்வை
இந்த சிறப்பான காலாண்டு முடிவுகளைத் தொடர்ந்து, Motilal Oswal Financial Services நிறுவனம் Zydus Wellness-க்கு 'Buy' ரேட்டிங்-ஐ உறுதி செய்துள்ளது. மேலும், இந்தப் பங்கின் டார்கெட் விலையை ₹575 ஆக உயர்த்தியுள்ளது. அடுத்த மார்ச் 2026 காலாண்டில், வழக்கமான வணிகத்தில் 8% வருவாய் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது, இது முக்கியமாக விற்பனை அளவுகளின் (Volume Increases) மூலம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், செப்டம்பர் 2025-ல் கையகப்படுத்தப்பட்ட ComfortClick வணிகம், ஒருங்கிணைந்த வருவாய் வளர்ச்சியைத் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், RiteBite Max Protein ரேஞ்ச் அதன் டபுள்-டிஜிட் வளர்ச்சி வேகத்தைத் தக்கவைக்கும் என்றும் Motilal Oswal கணித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வை ஈடுசெய்ய நிறுவனங்கள் அவ்வப்போது விலையை உயர்த்தினாலும், பரந்த நுகர்வோர் பொருட்கள் துறையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற தேவைகளில் ஸ்திரத்தன்மை காணப்படுவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.