Global SS Beauty Brands நிறுவனம், பிரான்சின் பிரபல வாசனை திரவிய நிறுவனமான INTERPARFUMS SA-உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இனி Coach, Jimmy Choo, Montblanc போன்ற பிரீமியம் பிராண்டுகள் இந்தியாவில் கிடைக்கும்.
புதிய கூட்டணி என்ன?
ஷாப்பர்ஸ் ஸ்டாப் (Shoppers Stop) நிறுவனத்தின் துணை நிறுவனமான Global SS Beauty Brands, பிரான்சின் முன்னணி வாசனை திரவிய நிறுவனமான INTERPARFUMS SA உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் Coach, Jimmy Choo, Montblanc, Lacoste, Lanvin மற்றும் Van Cleef & Arpels போன்ற உலகத்தரம் வாய்ந்த பிராண்டுகளை இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளனர்.
ஏன் இந்த முதலீடு?
வழக்கமான ஆடை விற்பனையை விட, பியூட்டி மற்றும் பர்சனல் கேர் பிரிவில் அதிக Margin கிடைக்கிறது. இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவே, ஷாப்பர்ஸ் ஸ்டாப் இந்தத் துறையில் அதிரடியாக இறங்கியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வெளிநாட்டு பிராண்டுகளுக்கான மோகம் அதிகரித்து வருவதால், இதை ஒரு பெரிய பிசினஸ் வாய்ப்பாக நிறுவனம் பார்க்கிறது.
Nykaa-விற்கு சிக்கலா?
இந்தியாவின் லக்ஸரி பியூட்டி மார்க்கெட்டில் ஏற்கனவே Nykaa போன்ற நிறுவனங்கள் வலுவாக உள்ளன. இவர்களுக்குப் போட்டியாக ஷாப்பர்ஸ் ஸ்டாப் எப்படித் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப்போகிறது என்பதுதான் முதலீட்டாளர்களின் முக்கியக் கேள்வி. லக்ஸரி பொருள்களை விற்பனை செய்ய அதிகப்படியான இன்வென்டரி (Inventory) மற்றும் ஸ்டோர் பராமரிப்பு செலவுகள் தேவை. இந்தச் செலவுகளைத் தாண்டி, லாபத்தை ஈட்டுவதே நிறுவனத்தின் மிகப்பெரிய சவால்.
இனி வரும் காலாண்டு முடிவுகளில் (Quarterly Results), இந்த லக்ஸரி பிராண்டுகளின் விற்பனை நிறுவனத்தின் லாப விகிதத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
