ITC நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 5.5% உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5.44% வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஏற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIs) ITC-யில் தங்களின் பங்கை 49.15% ஆக உயர்த்தியுள்ளனர். இது முந்தைய காலாண்டில் 48.90% ஆக இருந்தது. மறுபுறம், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) சற்று கவனமாக இருந்து, தங்கள் பங்குகளை 36.11% இல் இருந்து 34.83% ஆக குறைத்துள்ளனர்.
இவை ஒருபுறம் இருக்க, ITC நிறுவனம் உணவுத் துறையில் தனது இருப்பை வலுப்படுத்தும் விதமாக, Yoga Bar பிராண்டின் உரிமையாளரான Sproutlife Foods-ல் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. இது ITC-யின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சமீபத்திய இந்த ஏற்றங்களுக்கு மத்தியிலும், ITC-யின் கடந்த ஆறு மாத மற்றும் ஒரு வருட பங்குச் சந்தை செயல்திறன் இன்னும் எதிர்மறையாகவே (-ve) உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
