Everest Food Products நிறுவனத்தின் சீரகத்தூள் பாக்கெட்டுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பூச்சிக்கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட பேட்ச் தயாரிப்புகளை திரும்பப் பெற FSSAI உத்தரவிட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான (FSSAI) Everest Food Products Private Limited நிறுவனத்தின் குறிப்பிட்ட சீரகத்தூள் பேட்ச்களை உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது.
ஏன் இந்த நடவடிக்கை?
ஆய்வகச் சோதனையில், இந்த சீரகத்தூளில் Azoxystrobin மற்றும் Thiamethoxam போன்ற பூச்சிக்கொல்லிகளின் அளவு நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பான அளவை விட அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது Food Safety and Standards Act, 2006 சட்டத்தின் கீழ் விதிமீறலாகும். ஆரம்பத்தில் நிறுவனம் இதை எதிர்த்தாலும், அரசு ஆய்வகத்தின் மறு பரிசோதனையில் தயாரிப்பு 'UNSAFE' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
முக்கியமாக, Everest Food Products ஒரு தனியார் நிறுவனம். இது National Stock Exchange (NSE) அல்லது Bombay Stock Exchange (BSE)-ல் பட்டியலிடப்படவில்லை. எனவே, பங்குச்சந்தையில் உள்ள மற்ற முன்னணி நிறுவனங்களுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
பிற நடவடிக்கைகள்
இதற்கிடையே, சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக Creative Bakers and Confectioners நிறுவனத்தின் உரிமத்தை FSSAI தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய நாடு முழுவதும் ரெகுலேட்டர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
