உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில், தீபாவளி பலகாரங்களுக்கு 'Shelf-life' தேதியைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பால், சர்க்கரை விலை உயர்வுடன் இந்த புதிய விதிகளும் சேர்ந்துள்ளதால், சிறு வணிகர்கள் லாபத்தில் கடும் சரிவைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் என்ன?
பண்டிகை காலம் என்றாலே இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு மவுசு அதிகம். ஆனால் இந்த தீபாவளிக்கு, உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. குறிப்பாக, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில், லூஸ் ஸ்வீட்கள் (Loose sweets) விற்பனை செய்யப்படும்போதே, அந்தத் தின்பண்டங்கள் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதியைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறு வணிகர்களுக்கு ஏன் சிக்கல்?
பெரிய நிறுவனங்கள் தானியங்கி முறையில் தரக்கட்டுப்பாட்டைப் பராமரிக்கின்றன. ஆனால், உள்ளூர் கடைகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஒவ்வொரு பேட்ச் ஸ்வீட்களுக்கும் லேப் பரிசோதனை செய்து, தேதி குறிப்பிடுவது பெரும் பொருளாதாரச் சுமையாக மாறியுள்ளது.
ஏற்கனவே பால், சர்க்கரை மற்றும் உலர் பழங்களின் விலை உயர்ந்துள்ளதால், ஏற்கனவே மார்ஜின் (Margin) குறுகிப்போயுள்ளது. இப்போது இந்த கூடுதல் நிர்வாகச் செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
இந்த சூழல், அமைப்புசாரா துறையிலிருந்து (Unorganized sector) பெரிய பிராண்டட் நிறுவனங்களை நோக்கி மார்க்கெட்டை நகர்த்தும். FSSAI போன்ற அமைப்புகள் இப்போது கிளவுட் கிச்சன்கள் மற்றும் டார்க் ஸ்டோர்களிலும் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இதன் விளைவாக, முறையான தரக்கட்டுப்பாடு கொண்ட பெரிய ஃபுட் நிறுவனங்களுக்கு மார்க்கெட் ஷேர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த நிறுவனங்களின் அடுத்த காலாண்டு ரிசல்ட்டில் (Quarterly Results) மார்ஜின் நிலவரத்தை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
