சந்தை சரிவில் இருந்தாலும், Bosch Home Comfort India பங்குகள் இன்று **8%** உயர்ந்து **₹1,948** என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ரீ-பிராண்டிங் மற்றும் புதிய நிர்வாக மாற்றங்கள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சந்தை வீழ்ச்சியிலும் காட்டிய வேகம்:
பொதுவாக சென்செக்ஸ் 0.5% சரிந்திருந்தாலும், Bosch Home Comfort India பங்குகளின் செயல்பாடு வியக்க வைக்கிறது. கடந்த மார்ச் 2026-ல் இருந்த குறைந்தபட்ச விலையிலிருந்து, கடந்த சில மாதங்களில் இந்த பங்கு சுமார் 91% லாபத்தை வாரி வழங்கியுள்ளது.
நிர்வாக மாற்றமும் புதிய வியூகமும்:
முன்னதாக இது 'Johnson Controls-Hitachi' கூட்டு நிறுவனமாக இருந்தது. ஆகஸ்ட் 2025-ல் 'Robert Bosch Group' முழுமையாக இந்த HVAC வணிகத்தை கையகப்படுத்தியது. இப்போது ஜெர்மன் தொழில்நுட்பமும், 'Hitachi Cooling & Heating' தயாரிப்புகளும் இணைந்து புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றன. முக்கியமாக VRF சிஸ்டம், டக்டபிள் யூனிட்கள் மற்றும் டெலிகாம் துறைக்கான கூலிங் சொல்யூஷன்ஸ் ஆகியவற்றில் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
சவால்கள் என்னென்ன?
இந்திய ஏசி சந்தையில் Voltas, Daikin, Blue Star மற்றும் Havells போன்ற ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், போட்டி என்பது கடுமையானது. மேலும், கச்சாப் பொருட்களின் விலை மற்றும் அந்நிய செலாவணி மாற்றங்கள் கம்பெனியின் லாப வரம்பை (Profit Margin) பாதிக்கலாம். பணவீக்கத்தை சமாளித்து, இந்த நிறுவனத்தால் லாபத்தை தக்கவைக்க முடியுமா என்பதே முதலீட்டாளர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு:
புதிய உரிமையின் கீழ் நிறுவனம் எப்படி செயல்படப் போகிறது, ஹீட்-பங்க் (Heat-pump) வணிகத்தை எவ்வளவு திறமையாக விரிவாக்கப் போகிறது என்பதை பொறுத்தே இதன் அடுத்தகட்ட வளர்ச்சி அமையும். அடுத்தடுத்த குவார்ட்டர் ரிசல்ட்கள், நிறுவனத்தின் உண்மையான வளர்ச்சிப் பாதையை நமக்கு காட்டும்.
