லாபத்தில் பெரும் சரிவு - என்ன காரணம்?
Bata India நிறுவனம் வெளியிட்டுள்ள 2026 மார்ச் மாத காலாண்டு முடிவுகளின்படி, நிறுவனத்தின் வருவாய் 5.1% உயர்ந்து ₹828 கோடியாக உள்ளது. ஆனால், இதன் நிகர லாபம் (Net Profit) 95.2% சரிந்து வெறும் ₹2.1 கோடியாக மட்டுமே பதிவாகியுள்ளது. இது சந்தை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் EBITDA margins 400 basis points சரிந்து 18.2% ஆக உள்ளது.
ஒரு முறை செலவுகள் பாதிப்பு
இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக, நிறுவனத்தின் ஒரு முறை ஏற்படும் செலவுகள் (one-time charges) பார்க்கப்படுகிறது. இதன்படி, ஊழியர்களுக்கான Voluntary Retirement Scheme (VRS) காரணமாக ₹28.1 கோடி செலவாகியுள்ளது. மேலும், ராயல்டி உரிமைகள் தொடர்பான நிதிப் பொறுப்புகளை மறுசீரமைத்ததில் ₹22.4 கோடி அந்நியச் செலாவணி இழப்பு (foreign exchange loss) ஏற்பட்டுள்ளது.
பங்குச் சந்தை பார்வை
இந்த நிதிநிலை காரணமாக, Bata India பங்கு YTD (Year-to-Date) அடிப்படையில் சுமார் 29% சரிந்துள்ளது. இது முதலீட்டாளர் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பங்குச் சந்தை நிலவரப்படி, Bata India தனது சந்தைப் பங்கை (Market Share) தக்கவைப்பது சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.premium சர்வதேச பிராண்டுகள் மற்றும் குறைந்த விலை உள்ளூர் நிறுவனங்களிடமிருந்து கடுமையான போட்டி நிலவுகிறது.
எதிர்கால திட்டங்கள்
இருப்பினும், சில சாதகமான அம்சங்களும் உள்ளன. நிறுவனம் தனது சரக்கு இருப்பை (inventory) 13% குறைத்துள்ளது. செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் பணப்புழக்கம் (cash generation) 18.2% அதிகரித்து ₹132.2 கோடியாக உள்ளது. Hush Puppies மற்றும் Power போன்ற பிராண்டுகளின் வளர்ச்சி மற்றும் omni-channel உத்திகள் மீது நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும், சந்தையில் நம்பிக்கையை மீட்டெடுக்க, வருவாய் வளர்ச்சியை விட செலவுகளை திறம்பட நிர்வகிப்பது அவசியம் என எதிர்பார்க்கப்படுகிறது.
