வெள்ளியின் மதிப்பு உயர்விற்கான காரணம் என்ன?
தற்போதைய சந்தை நிலவரப்படி, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) வெள்ளி விலை ₹2,76,000-ஐ தாண்டியுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் குறைந்ததால், பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை சற்று குறைந்தாலும், வெள்ளியின் விலை வலுவாக உள்ளது.
தங்கம் பெரும்பாலும் பணவியல் மதிப்புக்காகவே அறியப்படுகிறது. ஆனால், வெள்ளி ஒரு நிதி ஹெட்ஜ் (Financial Hedge) ஆகவும், அதே சமயம் தொழில்துறை தேவைகளுக்கும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பசுமை எரிசக்தி (Green Energy) மற்றும் நவீன உற்பத்தித் துறைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால், உலகப் பொருளாதாரத்தின் நிலையைப் பொறுத்து, தங்கம் விலை நகர்வதை விட வெள்ளி விலை அதிக ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது.
