உலக சந்தையில் நிலவும் பதற்றம் மற்றும் எரிசக்தி விநியோகச் சிக்கல்கள் காரணமாக, இந்தியாவின் நிலக்கரி தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், நாட்டின் முக்கிய நிலக்கரி உற்பத்தியாளரான Coal India Limited-ன் சில முக்கியப் பிரிவுகளில் உற்பத்தி குறைந்துள்ளதால், ஆற்றல் பாதுகாப்பு (Energy Security) குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (Bharat Coking Coal Ltd - BCCL) பிரிவில் உற்பத்தி 12.3% சரிந்துள்ளது. சென்ட்ரல் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் (Central Coalfields Ltd - CCL) பிரிவில் 6.1%, வெஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் (Western Coalfields Ltd - WCL) பிரிவில் 8.8%, மற்றும் மகானதி கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் (Mahanadi Coalfields Ltd - MCL) பிரிவில் 3% என உற்பத்தி குறைந்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, சவுத் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் (South Eastern Coalfields Ltd - SECL) 5.3% உற்பத்தியை அதிகரித்துள்ளது. நார்தர்ன் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் (Northern Coalfields Ltd - NCL) 1.1% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி ஒட்டுமொத்த நிறுவனத்தின் உற்பத்தியை ஈடுசெய்யவில்லை. Coal India Limited-ன் மொத்த உற்பத்தி 2026 நிதியாண்டில் 1.7% குறைந்து 768.1 மில்லியன் டன் ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் இது 781.1 மில்லியன் டன் ஆக இருந்தது.
வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதி விலையும் உயர்ந்து வருவதால், உள்நாட்டு உற்பத்தியின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
முன்னாள் மின்சாரத்துறை செயலாளர் அனில் ரஸ்தான் கூறுகையில், 'வெறும் உற்பத்தி இலக்குகளை அடைவதற்காக, போதுமான ஸ்டோரேஜ் வசதிகள் இல்லாமல் அதிகப்படியாக நிலக்கரியை உற்பத்தி செய்வது, நிலக்கரி வீணாக வழிவகுக்கும்' எனத் தெரிவித்துள்ளார். இது தற்போதைய சப்ளை செயின் சவால்களை மேலும் மோசமாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இரு தரப்பினரும் (Coal India மற்றும் தனியார் நிறுவனங்கள்) கோடைக்கால மின்சாரத் தேவையையும், மழைக்கால இடையூறுகளையும் சமாளிக்கத் தேவையான நிலக்கரி கையிருப்பை உருவாக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால், முன்னாள் Coal India CMD சுதிப்தா பட்டாச்சார்யா வேறுவிதமான கருத்தை முன்வைத்தார். 'உற்பத்தி இலக்குகள் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்' என்றும், 'கோடைக்காலங்களில் அதிகப்படியான கையிருப்பைத் தவிர்த்து, தரத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றும் அவர் பரிந்துரைத்தார். எதிர்காலத்தில், ரினியூவபிள் எனர்ஜி உடன் நிலக்கரிக்கான சந்தை outlook மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உற்பத்தி குறைந்தாலும், பவர் பிளாண்ட்கள் மற்றும் இண்டஸ்ட்ரியல் யூசர்களுக்கான ஒப்பந்த விநியோகங்களில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டதாகப் பொதுவான தகவல்கள் இல்லை.