UBS, JPMorgan போன்ற முன்னணி சர்வதேச நிறுவனங்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்வதில் சில தயக்கங்களை வெளிப்படுத்தியுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க வட்டி விகிதங்கள் மற்றும் வரி கொள்கைகள் இதற்குக் முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
UBS, Macquarie, JPMorgan மற்றும் Bernstein உள்ளிட்ட உலகளாவிய புரோக்கரேஜ் நிறுவனங்கள் தற்போது இந்திய பங்குகள் விஷயத்தில் ஒரு எச்சரிக்கையான போக்கையே கடைபிடிக்கின்றன. இந்திய சந்தையில் கூடுதல் முதலீடுகளைச் செய்வதற்கு முன்னதாக, உலகளாவிய நிதி மேலாளர்கள் சில முக்கியமான மேக்ரோ எகனாமிக் காரணிகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
முதலீட்டாளர்களின் முக்கிய கவலைகள்:
- எரிசக்தி செலவுகள்: கச்சா எண்ணெய் விலையில் நீடிக்கும் அழுத்தம் இந்தியாவின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்கு (Current Account Deficit) பெரும் சவாலாக உள்ளது.
- அமெரிக்க வட்டி விகிதங்கள்: அமெரிக்காவின் ட்ரஷரி ஈல்ட் (US Treasury yields) உயர்ந்துள்ளதால், வளரும் சந்தையான இந்தியாவை விட, பாதுகாப்பான சந்தைகளில் முதலீடு செய்வதையே பல சர்வதேச முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர்.
- வரி விதிப்பு: நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) தொடர்பான கட்டமைப்பில் உள்ள சிக்கல்கள் முதலீட்டாளர்களை யோசிக்க வைக்கின்றன.
நிறுவனங்களின் செயல்பாடு:
இந்த சவால்களுக்கு மத்தியிலும், இந்திய நிறுவனங்களின் லாபத்திறன் (Corporate Earnings) சிறப்பாகவே உள்ளது. குறிப்பாக, ஆட்டோமொபைல் மற்றும் ரினியூவபிள் எனர்ஜி துறைகளில், அரசு மானியங்களைச் சார்ந்திருக்காமல் சொந்த நிதியிலேயே வளர்ச்சியை எட்டும் நிறுவனங்களை சர்வதேச முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ரீடைல் துறையில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஒட்டுமொத்தத்தில், இந்தியாவின் அடிப்படை வளர்ச்சி நன்றாக இருந்தாலும், உலகளாவிய பொருளாதார சூழலுக்கு ஏற்ப நமது நிறுவனங்கள் கடன் மற்றும் மார்ஜின் அளவுகளை எவ்வாறு கையாளப் போகின்றன என்பதுதான் வரும் நாட்களில் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்.
